English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trespass
n. வரம்புகடப்பு, எல்லை மீறுகை, நெறி திறம்பல், ஆணை மீறுகை, சட்ட மீறுகை, பிறர் உரிமைத் தலையீடு, உடைமை மீச்செலவு, (வினை) வரம்புகடந்து செல், உரிமை எல்லைகடந்து நட, ஆணை மீறு,. அழையாது நுழை, பிறர் உடைமையில் தலையிடு, பிறர் உரிமையில் தலையிடு, நேர்மையற்ற உரிமை கோரு, வரம்பு மீறிய சலுகை எடுத்துக்கொள், தகாச்சலுகை எடுத்துக்கொள், ஒழுங்கு மீறு, தீங்கு செய்.
Trespasser
n. வரம்பு கடப்பவர், அத்துமீறுபவர்.
Tress
n. மயிர்டக்கற்றை, பனிச்சை, கொண்டை, பெண்களின் மயிர்ச்சுருள், (வினை) பனிச்சையிடு, கூந்தலைப் புரிகுழல்களாகப் பின்னு.
Tressed
a. பனிச்சையிடப்பட்ட, புரிகுழல்களாகப் பின்னப்பட்ட, புரிகுழல்களாயுள்ள, புரிகுழல்களையுடைய.
Tresses
n. pl. அளகம், பெண்ணின் கூந்தல்.
Tressy
a. புரிகுழல்களையுடைய, புரிகுழல் போன்ற.
Trestle
n. சாய்கால், மேசை முதலியவற்றின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்று, சாரவிட்டக் கால் அடிக்கடி கூட்டியிணைக்கப்பட்ட, (கப்) பாய்மர உதைகால் சட்டம்.
Tret
n. சேதார ஈட்டுக் கழிவு.
Trey
n. சீட்டில் மூன்று, பகடையில் மூன்று, முப்புள்ளிப் பகடை.
Trfficless
a. போக்கு வரவற்ற.
Triabdelphous
a. (தாவ) மூன்று அடைவுகளாயுள்ள பூவிழைகளுடன் கூடிய.
Triable
a. முறைமன்ற விசாரணைக்குரிய, வழக்காடற்குரிய.
Triad
n. மும்மை, மூன்றுகொண்ட தொகுதி, (வேதி) மூவிணைதிறத் தனிமம், அல்லது உறுப்பு, (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு, முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
Triage
n. வகைப்படுத்துதல், உடைத்த காப்பிக்கொட்டை.
Trial
n. முயற்சி, தேர்வாய்வு, சோதனை, சோதனை முறை, பலப்பரிட்சை, கேள்வி முறை, வழக்கு விசாரணை, சோதனை செய்பவர், பருவரல், கடுந்துன்ப அனுபவம், தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி, வௌளோட்ட முயற்சி, ஒத்திகையாட்டம், ஆய்வுக்குழதம் தேர்வாட்டம், பந்தயத்தேர்வாய்வுப் போட்டி, (பெயரடை) தேர்வாய்விற்குரிய, தேர்வாய்வு முறையான, வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
Triandrous
a. (தாவ) மூன்று பூவழைகளுடன் கூடிய.
Triangle
-1 n. முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
Triangle
-2 n..வடக்கு விண்மீன் குழுக்களும் ஒன்று.
Triangular
a. (வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய்.