English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tremulous
a. குரல் நடுங்குகிற, கை பதறுகிற, உறுப்புத் துடிக்கி, இலை வகையில் துடித்ததிர்வுறுகிற, கோடு வகையில் நடுக்குறு கைகளால் எழுதப்பட்ட, அஞ்சி நடுங்குகிற, உரமற்ற, எளிதில் அஞ்சுகிற, தடுமாற்றமுடைய.
Tremulousness
n. நடுக்கம், துடிப்பதிர்வு.
Trench
n. (படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.
Trenchancy
n. குத்துந்தன்மை, வெட்டுந்தன்மை, கடுப்பு, உறைப்பு.
Trenchant
a. குத்தலான, வெட்டுகிற, கூரிய, ஊடுருவிச் செல்லுந் தன்மையுடைய, உறைப்பான.
Trencher
-1 n. அகழி வெட்டுபவர்.
Trencher
-2 v. தட்டு, மரவை, உண்டாட்டு மகிழ்வு, தின்னுதல், (பெயரடை) உண்ணுதல் சார்ந்த, சாப்பிட வருகிற.
Trencherman
n. நன்றாகச் சாப்பிடுபவர்.
Trend
n. போக்கு, இயக்கச் சாய்வு, செல்திசை, நாட்டம், மனப்போக்கு, மனத்தேட்டம், விருப்பு வெறுப்புப்பாங்கு, கருத்துப்போக்கின் சார்வு, நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு, (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு, குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை, குறிப்பிட்ட படி திரும்பு, குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு, பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு, குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு, போக்குடையதாயிரு, சார்புடையதாயிரு.
Trental
n. முப்பது வழிபாடு, இறந்தவர் ஆன்ம சாந்திக்காக முப்பது வழிபாடு.
Trepan` n.
கபாலத் துளையூசி, அறுவை மருத்துவ வகையில் மண்டையில் தமரிடுங் கருவி, சுரங்கத் துளைக்கருவி, (வினை) கபாலத் துளையூசியால் மண்டையோட்டினைத் துளை.
Trepan`2
n. பொறியில் சிக்கவை, கண்ணியில் அகப்படுத்து, வசியப்படுத்து.
Trepang,
சீன நத்தைக் குழம்புணர்வு.
Trepeziform
a. ஊசுதண்டு வடிவான, உடற்பயிற்சிக்கான ஊசலாடும் சலாகை போன்ற.
Trephine
n. நுண்திருக்கு, செப்பமிக்க கபாலத் துளையூசி, (வினை) நுண்திருக்கினால் மண்டையோட்டைத் துளை.
Trepidant
a. நடுங்கும் இயல்புடைய.
Trepidation
n. நடுநடுக்கம், பீதி, கிலி, பரபரப்பு, துடிதுடிப்பு, படபடப்பு, கலக்கம், மனக்குழப்பம், நடுக்குவாதம், பக்கவாதத்தால் ஏற்படும் உறுப்பு நடுக்கம், முற்காலக் கருத்துப்படி கதிர்வீதியின் ஊசலாட்டம்.
Trepidatory
a. நடுங்கும் பாங்குடைய.