English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trifacial
n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
Trifchinosis
n. இழைகப்புழு நோய்.
Trifid
a. (தாவ,.வில) முப்பிரிவுடைய, முப்பிளவுடைய, முக்கவருடைய.
Trifle
n. சிறுக்கம, அற்பம், சிறுதொகை, சிறு மென்பண்ட வகை, பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம், சிறுவங்கம், வௌளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு, பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக நட, குறும்பாக நடந்துகொள், காலத்தை வீணாக்கு, ஆற்றலைச் சிதற அடி, பணத்தை வீணாக்கு.
Trifler
n. விளையாட்டுக்கரா, அற்பச் செய்திகளில் தலையிடுபவர், கேலி கிண்டல் செய்பவர், பொறுப்பற்றவர்.
Trifle-ring
n. புதிர் வளைய வகை.
Trifling
a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள, பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய.
Trifloral, triflorous
a. (தாவ) மூன்று மலர்கள் கொண்ட.
Trifocal
a. மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள.
Trifoliate
a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய.
Triform, triformed
(தாவ) மூன்று மலர்கள் கொண்ட.
Trifurcate
a. முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி.
Trig
n. தடுப்புக்கட்டை, முட்டுக்கட்டை, சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு, (பெயரடை) முறுக்கான, படுநேர்த்தியான, விறுவிறுப்பான, (வினை) முறுக்டகாக் அணிசெய், நேர்த்தியாக்கு, விறுவிறுப்பாக்கு, உதைகொடுத்து நிறுத்து, சப்பைக் கட்டையிடு, தடுப்புக் கட்டையிட்டுத் தடு.
Trigamist
n. ஒரேசமயம் மூன்று மனைவியரையுடையவர், ஒரே சமயம் மூன்று கணவரை உடையவர்.
Trigamous
a. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைய, ஒரேசமயத்தில் மூன்று மனயரையுடைய, முன்முறை மணந்த, (தாவ) ஒரே கொத்தில் ஆண் பெண் இணைபாற் பூக்களையுடைய.
Trigamy
n. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை, ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை, திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம்.
Trigeminal
n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
Trigeminus
n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-உவ்ர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு.
Trigger
n. விசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.
Triglot
a. மூன்று மொழிகளில் உள்ள.