English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trilingual
a. மூன்று மொழிகளிலுள்ள, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
Triliteral
a. மூவெழுத்துக்களாலான, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
Triliteralism, triliterality
n. மூன்றுமெய் அடிவேருடைமை.
Trilith
n. முக்கூட்டுக்கல் தொகுதி, (தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை.
Trill
n. நீடதிர்வொலரி, நடுங்கொலி, பறவை நீள்முரல்வு, அதிர்வொலி, ரகர-றகர வொலிகள், (வினை) அதிவொலி செய், அகவு, பறவை வகையில் நீள் முரல்விசை எழுப்பு.
Trilling
-1 n. மும்ணிப் பளிங்கு, மும்மணியுருப் படிவம், மூவீற்றுக் குழவி, ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று.
Trilling
-2 a. அதிர்வொலியான, நடுங்கொலியான.
Trillion
n. பதினாயிரங்கோடி கோடி, அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி, (பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான, அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான.
Trilobate
a. மூன்று மடல்களடைய.
Trilobite
n. முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை.
Trilobitic
a. தொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
Trilocular
a. மூன்று கண்ணறைகளுடன் கூடிய.
Trilogy
n. துன்பியல் நாடக மூன்றன் தொகுதி, மூன்றன் தொகுதி.
Trim
n. செவ்வொழுங்கு, சீர்நிலை, சரிசெப்பம், இசைவொழுங்கமைதி, ஒத்திசைவமைதி, வரிசை ஒழுங்கு, கத்தரிப்பு ஒழுங்கு, (கப்) பாய்மர நிலைத்தொடர்பு, அணியமைதி, தொடர்பமைதி, இசைவுப் பொருத்த நிலை, மனநிலையமைதி., செயல்திருத்தம், (பெயரடை) செவ்வொழுங்கலான, வரியமைவான, திருத்தநலம் வாய்ந்த, சீரமைவான, கவர்ச்சியமைவான, பொலிவமைவான, நன்கு பேணப்பட்ட, செவ்வெட்டான, வரைநலமுடைய, உருச்செப்பமுடைய, (வினை) (பே-வ) கண்டி, (பே-வ) வன்கண்மையுடன் திட்டு, (பே-வ) அடித்து நொறுக்கு, (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு, (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு, ஒழுங்குபடிக் கத்தரி, மிகைநீக்கு, செப்பஞ்செய், துப்புரவு செய், ஒழுங்குபட அடுக்கிவை, பிசிரகற்று, தூசகற்று, விளக்கக்கரி நீக்கு, நேர்த்தியாக்கு,. உடைஒப்பனை செய், அணிச் செப்பஞ் செய், ஓர ஒப்பனை செய், மீன்கண வகையில் கரையோரமாகச் செல், (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து, (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை, அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று, எக்கட்டசியுஞ் சாராது நட.
Trimensual
a. மும்மாத வாரியான, மூன்று திங்கள்களுக்கொருமுறை நிகழ்கிற.
Trimester,
மும்மாதம், கல்வியாண்டில் ஒரு பருவம்.
Trimeter
n. மூவளவையாப்பு, லத்தீன்-கிரேக்க மொழிகளில் குறில் நெடில் அசையார்ந்த மூவிருசீரடிப்பாட்டு, (பெயரடை) முவிணைச் சீரியைபுடைய.
Trimethylene
n. நீரகக் கரியம் அடங்கிய மயக்க மருந்துச் சரக்கு.
Trimetrogen
n. வானிழற்பட முறை, வானில் மூன்று கோணங்களிலிருந்து ஒரே வேளையில் எடுக்கும் நிழற்பட இயைபு.
Trimly
adv. நல்லொழுக்காய், நல் வரிசையாய், நற்றுய்மையாய், நற்பொலிவாய்.