English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Telautogram
n. வரைவுருத் தந்திச் செய்தி.
Telautograph
n. வரைவுருத் தந்திமுறை சார்ந்த.
Telearchics
n. pl. சேணியக்கு திறல், வானுர்தி வகையில் கம்பியில்லாத் தந்திமூலம் தொலைவியக்கங் கட்டுப்படுத்தும் முறை.
Telebarometer
n. சேணிலை வளியழுத்தமானி.
Tele-car
n. தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு.
Telecast
n. தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம்.
Telecommunication
n. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
Telecon
n. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஔதயிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு.
Tele-deltos
n. தந்தியுந்துகலத் தாள், தந்தியுந்துகலத்தில் செய்தி அச்சடிக்கப் பயன்படுத்ததுந் தாள்.
Teledu
n. முடைநாற்றம் வீறூம் தென்கிழக்காசிய வளைக்கரடி வகை.
Telefilm
n. தொலைக்காட்சித் திரைப்படம்.
Telegenic
a. தொலைக்காட்சியில் பரப்பத்தக்க.
Telegony
n. (உயி) மாற்றுத்தந்தைமரபுப் பண்பு, தாயின் ஓர் ஆண்வழிச் சேயில் முந்திய ஓர் ஆண்வழியின் தாக்கு விளைவு தோற்றும் அரும்பண்பு.
Telegraph
n. தந்திப்பொறி, தந்தி முறைக்குரிய கருவிகலத் தொகுதி, இருப்புகப்பாதைக் கைகாட்டிமரம், சேய்மைக் காட்சிப் பட்டி, மரப்பந்தாட்டக் களத்தில் தொலைவில் தெரியத்தக்க கெலிப்பெண்-குதிரை எண் முதலியன காட்டுங்குறிப்புப் பலகை, (வினை) தந்தியடி, தந்திச் செய்தி, அனுப்பு.
Telegraph-board
n. சேய்மைக்காட்சிப் பட்டி, தொலைவிலிருந்தே காணுதற்கு வாய்ப்பாகக் கெலிப்பெண்-குதிரை எண் முதலியன இட்டுக் காட்டும் பலகை.
Telegrapher
n. தந்தித்துரையர், தந்திக்கருவி இயக்குபவர்.
Telegraphese
n. தந்திமொழி, தந்திக்குறிப்புமொழிக் குறியீட்டு மரபு, (பெயரடை) தந்திமொழியிலுள்ள.