English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tele-radio
n. தொலைக்காட்சி வானொலிகள்.
Tele-ran
n. வானியக்குதிறல், தொலைபேசி சேணளவி மூலம் விமானத்திரையில் செய்திகாட்டி விமானம் இயக்கும் முறை.
Telerecording
n. தொலைக்காடசிப் பரப்புக்கான நிகழ்ச்சித் திட்டம், தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிப் பதிவு.
Telergy
n. (உள) சேணிலை உணர்வாட்சித்தாக்கு, சேணிலை உணர்வாட்சியினால் இயக்கப்டுபவர் மூளையின்மேற் செயற்படுவதாக உணரப்படும் தாக்கு விளைவு.
Telescope
n. தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
Telescopic
a. தொலைநோக்காடி சார்ந்த, தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய, லைநோக்காடியால் காணக் கூடிய, தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற, தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.
Telescopiform
a. தொலைநோக்காடி வடிவான.
Telescopist
n. தொலைநோக்காடியைப் பயன்படுத்துவர்.
Telescopy
n. தொலைநோக்காடி அமைக்குங் கலை, தொலைநோக்காடியைச் செயற்படுத்துங் கலை.
Teleseme
n. மின்னியக்கச் சைகைப்பொறி.
Teletherapy
n. கதிரியக்கப் பண்டுவம், புற்றுநோய் முதலியவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை.
Telethermometer
n. சேய்மை இயக்குதிறல் வெப்பமானி.
Teleutography
n. வரைவுருத் தந்திமுறைமை.
Teleview
n. தொலைக்காட்சி நிகழ்ச்சி.
Televiewer
n. தாலைக்காட்சி நிகழ்ச்சி காண்பவர்.
Televise
v. தொலைக்காட்சி வழியே நிகழ்ச்சி பரப்பு.
Television
n. தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி.
Televisor
n. தொலைக்காட்சிக் கருவி, தொலைக்காட்சிளை வாங்கி வழங்குங் கருவி.
Telgram
n. தந்திச் செய்தி, கம்பி.
Tell
v. கூறு, எழுத்துமூலம் எடுத்துரை,. தெரிவி, பலரறியக் கூறு, வௌதயிடு, உரை, பேசு, செய்தி பொடு, விளக்கம், அளி, விரித்துரை, தகவல் கூறு,. உறுதியிட்டுரை, பிரித்துணர், வேறுபாடு கண்டறி, வேறுபடுத்திக் கூறு, உறுதியளி, உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு, குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு, தொகை எண்ணு, தொகைப்படுத்திக் கூறு, பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு, உருமாலை எண்ணு, வேண்டு, கட்டளையிடு.