English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Temperate
a. மட்டான, மிதமான, தன்னடக்கமுள்ள, நடையமைதி வாய்ந்த, தற்கட்டுப்பாடுடைய, உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற, மொட்டான, மட்டான தட்பவெப்பமுடைய.
Temperative
a. மட்டுப்படுத்துந் திறமுடைய, மட்டியல் பண்பூக்குகிற, அமைதிப்படுத்தக்கூடிய.
Temperature
n. தட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.
Tempest
n. புயல், மழை கலந்த சூறாவளி, மனக்கொந்தளிப்பு.
Tempestuous
a. புயலார்ந்த, கடுங் கொந்தளிப்புடைய, சீற்றமிக்க.
Templar
-1 n. (வர) திருநிலைக் காப்பு வீரர்ட, கிறித்தவரின் திருநாடான பாலஸ்தீன் செல்லும் புண்ணிய யாத்திரிகர்களின் பாதுகாப்பு நாடி கி.பி.111ஹீ-இல் அமைக்கப்பட்ட திருநிலைக் காப்பு வீ நிறுவனத்தின் உறுப்பினர், மதுவிலக்குக் கழக உறுப்பினர், அமெரிக்க நற்கொத்தர் சங்க உறுப்ப
Templar(2), templar
-3 n. லண்டன் மாநகர முறைவர் கழகக் கட்டிடங்களில் இடம் பெற்றுவாழும் மாணவர்.
Temple
-1 n. கோயில், வழிபாட்டிடம், இறைவன் உறையும் இடம்.
Temple
-2 n. திருநிலைக்காப்பு வீரர் நிறுவனக் கட்டிடம்.
Temple
-3 n. செவித்தடம், கன்னப்பாட்டு.
Temple
-4 n. குறுக்குக்கழி, தறியில் துணியை நீட்டிவைத் திருப்பதற்கான அமைவு.
Templet
n. வார்ப்பட அளவுச்சட்டம்.
Tempo
n. விசைவேகம், உணர்ச்சிவேகம், நிகழ்ச்சி வேகம், நடைவேகம், போக்குவேகம், வேகவீதம், தனி முறை வேகப் பண்பு, (இசை) காலநடை வேகமுறை.
Temporal
n. கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த.
Temporalities
n. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள்.
Temporality
n. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை.
Temporalty
n. சமயச் சார்பற்ற பொதுநிலை மக்கள், பிரிட்டிஷ் மாமன்றத்தில் சமயத்துறை சாரா அரசியற் பெரு மக்கள் தொகுதி.
Temporary
n. சிறிதுகால வேலையர், (பெயரடை) சிறிதுகாலத்துக்கேயுரிய, அப்பொழுதைக்கான.
Temporization
n. தட்டிக்கழிப்பு, காலங்கடத்தீடு, சமய சஞ்சீவித்தனம்.