English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tendril
n. தளிர்க்கை, கொடிகளின் தளிரிழை.
Tenebrae
n. pl. வாரக்கடைத் துதிப்பாடல், புனித வாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும் கடைசி மூன்று நாட்கட்குரிய வழிபாட்டுப் புகழ்ச்சிப் பாடல்.
Tenebrific
a. இருளுண்டுபண்ணுகிற.
Tenebrous
a. இருண்ட, மனத்துயரார்ந்த.
Tenement
n. குடியிருப்பு மனை, குடியிருப்பறை, சிறுநிலக்கிழமை, சிறு கிழார்நிலம், (சட்) நிலையான உடைமை வகை.
Tenemental, tenementary
a. குடியிருப்பறைகள் சார்ந்த, அறைகள் வகையில் குடியிருப்பிற்குரிய.
Tenement-house
n. குடியிருப்பறைத் தொகுதியுடைய வீடு.
Tenesmus
n. (மரு) சூடுபிடிப்பு, நீர்ச்சுருக்கு, மலச்சிக்கல், மலச் சருக்கு, அடிக்கடி மலங் கழிக்க விழைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க விழைவு.
Tenet
n. தனிமனிதர் கொள்கை, தனிக்குழுக் கோட்பாடு, தத்துவக்கூறு, சித்தாந்தக்கூறு.
Tenfold
a. பத்துமடங்கான. (வினையடை) பத்துமடங்காக.
Tenite
n. மரச் சத்துக்குழைம வகை, புதிதாக்கப் பெற்றுள்ள செயற்கை மூலப்பொருள்.
Tenner
n. (பே-வ)பத்துப் பொன் தாள் நாணயம், பத்து வௌளித் தாள் நாணயம்.
Tennis
n. வரிப்பந்து, வரிப்பந்தாட்ட வகை.
Tennis-court
n. வரிப்பந்தாட்டக் களம்.
Tenon
n. பொருதது முளை, எதிர்க்குழியில் பொருத்தச் செய்யப்பட்ட முனை, (வினை) பொருத்து முனை செய், முளை செதுக்கிப் பொருத்து.
Tenor
n. நிலையான போக்கு, பொதுப்போக்கு,. நடைமுறைவழி, பேச்சுப்பாங்கு, எழுத்துத்தொனி, செல்திசை, கருத்துச் செல்திசை, (சட்) உள்நோக்கம், (சட்) சரிபப்ர்ப்பு, (இசை) ஆடவர் உச்சக் குரல் இசை, உச்சவொலிக்கருவி, இசை, உச்ச இசைக்குரல் ஆடவர், கருவிவகை இசை.
Tenorist
n. உச்சக்குரலோன், உச்சக்குரல் இசைக்கருவி வாசிப்பவர்.
Tenotomy
n. தொட்டிக்கால் வகையில் தசை நாண் அறுவை.
Ten-pounder
n. முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர்.