English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tent-bed
n. கூடார மேற்கவிகை, கூடார வடிவாயமைந்த படுக்கை விதானம்.
Tenter
-1 n. பொறுப்புக் காப்பாளர், தொழிற்சாலையில் இயந்திரப் பாதுகாப்புப் பொறுப்பாளர்.
Tenter
-2 n. உணக்குபொறி, ஆடை காயும்போது சீர்நேராயமைய உதவும ஆடையுணக்கு துறட்டி, சீர்ப்பொறிக் கொடுக்கு.
Tenterground
n. துணி உணக்கு கட்டக்களம்.
Tenter-hook
n. உணக்குப்பொறிக் கொக்கி.
Tent-fly
n. கூடார முகட்டுத்திரைக் கவிகை, கூடார வாயிற் புழைத் தட்டிழைத் தட்டிக்கதவு.
Tenth,
பத்தாவது, பத்தில் ஒன்று, (பெயரடை) பத்தாவதான, பத்தில் ஒன்றான.
Tent-peg
n. கூடார நிலைமுளை.
Tent-pegging
n. கூடாரமுளைத் தூக்காட்டம், குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம்.
Tenuis
n. கூடார நிலைமுனை.
Tenuity
n. இழைமை, கம்பிபோன்ற ஒல்லியான தன்மை, மெல்லிதாந் தன்மை, தடிப்பின்மை, நொய்ம்மை, வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை, நெகிழ்வுநிலை, நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை, எளிமை, பகட்டின்மை.
Tenuous
a. ஒல்லியான, மெல்லிய, நொய்தான, அடர்த்தியற்ற, நுண்ணிய, வேறுபாடு வகையில் நுட்பநுணுக்கமான.
Tenure
n. உடைமையுரிமை, உரிமைநுகர்வு, உடைமையுரிமைக் காலம், உரிமை நுகர்வுக் காலம், ஊழிய உரிமை, பதவிக்காலம், உரிமைநிலை.
Tenuto
a. (இசை) முழுநேரம் இசைக்கப்படுகிற.
TeocallI
n. மேட்டுத் தளி, மெக்சிகோ நாட்டுக்கூர்ங் கோபுரக் கோயில்.
Tepee
n. அமெரிக்க இந்தியர் கூடாரம்.
Tepefaction
n. வெதுவெதுப்பாக்கல், வெதுவெதுப்பு.
Tepefy
v. வெதுவெதுப்பாக்கு, வெதுவெதுப்பாகு.
Tephigram
n. (வானிலை) வளிநிலையடுக்கு வரைபடம், வளிமண்டலப் படிநிலைகளின் தட்பவெப்பப் பதிவு வரைபடம்.