English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tephrite
n. பொதுநிலை எரிமலைப்பாறை.
Tepid
a. வெதுவெதுப்பான, சற்றே சூடான.
Tepidarium
n. வெதுவெதுப்பறை, பண்டை ரோமரிடையே குளிப்புக் கூடத்தின் இடைநிலை வெப்ப அமைவுடைய அறை.
Terai
n. வெயில்தொப்பி வகை.
Teraph
n. யூதர் வழிபாட்டுச்சிலை.
Teratogenic
a. கோர உருப்பிறப்புச் சார்ந்த.
Teratological
a. விந்தைப் பிறப்பான, வியத்தகு.
Teratologist
n. வியப்புரு நுலார், புணைந்துரையாளர்.
Teratology
n. விந்தைப்பிறப்பு நுல், உயர்வுநவிற்சி.
Terce
n. மூன்றில் ஒருகூறு.
Tercel
n. ஆண் வல்லுறு, இராசாளிச் சேவல்.
Tercentenary
n. முந்நுற்றாண்டு நிறைவுவிழா, (பெயரடை) முந்நுற்றாண் நிறைவிற்குரிய.
Tercentennial
a. முந்நுறாண்டு சார்ந்த, முந்நுறாண்டு நிறைவிற்குரிய.
Tercet
n. மும்மை, மூன்றன்தொகுதி, அடியியைபுத் தொடையினையுடைய ஒரே மூன்றடிப்பாடல், இருசுர நேரத்திற் பாடப்படும் மூன்று சுரத்தொகுதி.
Terebene
n. தொற்றுத்தடை மருந்து வகை, தேதாரத்தைலத்துடன் கந்தகக்காடி கலந்து பெறப்படும் நீரகக் கரிய வகை.
Terebic
a. சரளமரஜ்ஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை தரும் மரத்திற்குரிய.
Terebinth
n. சரளமரம், தேவதாரத் தைல வகை தரும் மரம்,
Terebinthine
a. சரள மரஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை சார்ந்த.
Terebra
n. பூச்சி வகையின் முட்டையிடும் உறுப்பு, துளை படை, பண்டை ரோமரிடையே சுவர் துளைக்கம் பொறி, துறப்பணம், துளைக்குங்கருவி, தன்ரூசிபோன்ற தோட்டுறுப்பினையுடைய உயிரினம்.