English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Terminational
a. (இலக்) விகுதிசார்ந்த, இறுதிநிலை சார்ந்த.
Terminative
a. முடிக்கக்கூடிய, இறுவாயாகக்கூடிய, முடிவுதெரிவிக்கிற, நிறைவு குறிக்கிற, வரையறைப்பட்ட, தனிநிலையுறுதியான, முடிந்த முடிவான.
Terminatively
adv. முடிந்த முடிவாக.
Terminator
n. முடிவு செய்பவர், முடிப்பது, ஔத நிழல் இடைவரை வானொளிக் கோளங்களின் இருளையும் ஔதயையும் வேறுபடுத்துங் கோடு.
Terminatory
a. முடிக்கிற, இறுதிசெய்கிற.
Terminer
n. (சட்) அறுதியீடு, உறுதிச்செயல்.
Terminism
n. வரைவுய்திக் கோட்பாடு, கிறித்தவ சமயத் துறையில் கழிவிரக்கத்தால் மன்னிப்பு உய்தி பெறுதற்கு ஒவ்வொருவருக்கும் குறித்த கால எல்லை வரையறை உண்டெனுங் கொள்கை, (மெய்) பொதுப்பதப் போலிமைக் கோட்பாடு.
Terminological
a. பதப் பயனீட்டாய்வு நுலுக்குரிய, பயனீட்டுச் சொற்றொகுதிக்குரிய, துறைச்சொல் குதிக்குரிய, துறைச்சொல் சார்ந்த.
Terminologically
adv. பதப் பயனீட்டாய்வு நுல் முறையில், துறைச்சொல் என்ற முறையில்.
Terminology
n. பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல்.
Terminus
-1 n. பண்டை ரோமர் வழக்கில் எல்லைத் தெய்வம்.
Terminus
-2 n. முடிவிடம், முனைக்கோடி, கடைக்கோடி, இருப்புப்பாதை முடிவிடம், சதுரத் தூணில் முடியும் மார்பளவு மனித உரு.
Termitarium
n. கறையான் கூண்டு, கறையான் புற்று, தேர்வாய்வுப்புற்று.
Termitary
n. கறையான் புற்று.
Termite
n. செல், கறையான்,
Termless
a. வரையறையற்ற, கால எல்லையறுதியற்ற, நிபந்தனையற்ற.
Termly
a. பருவத்திற்குரிய, சட்டமன்ற-முறைமன்ற வகையில் நீடிருக்கைக் காலத்திற்குயி, பருவப்படியான, பருவந்தோறும் நிகழ்கிற, பருவந்தோறுங் கொடுக்கப்படுகிற, (வினையடை) பருவப்படி, பருவந்தோறும்.
Termopane
n. மின்தடைக் கண்ணாடிச் சில்லு, சுற்றித் தகடுபொருத்தி வளியிடையீடில்லாமல் செய்யப்பட்ட இரு கண்ணாடிச் சில்லுகளாலான மின்தடைக் கண்ணாடிப் பிழம்பு.
Termor
n. குறிப்பிட்ட காலக் குத்தகையர், குறிப்பிட்ட கால உரிமையர்.
Terms
n. pl. சொற்றொகுதி, வாசகம், சொற்பாங்கு வாசகப்போக்கு, மொழி, பேச்சுப்பாணி, கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், ஒப்பந்த விதிமுறைகள், ஆசார நடைமுறை விதிகள், விலைமுறைத் திட்டம், விலைவீதம், ஒப்பந்த விலை, கேள்வி விலை, கோரு விலை, செயல் எல்லை, தொடர்பு, படிநிலை.