English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Terraefilius
n. நாட்டு மண்ணிலேயே பிறந்தவன், பழங்குடி மகன், எளிய குடிப்பிற்புடையவன்.
Terrain
n. திணைநிலம், நில இயலில் தனித்தன்மையுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி, போர்த்துறையில் தனித்திறங்களுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி.
Terramare
n. மண்படிக உரம், எரியக்காடி உப்பு எலும்புகள் முதலியன அடங்கியுள்ள மக்கிய மண்படிவு உஜ்ம், வரலாற்றுக்கால முன் குப்பைகூளப்படிவம்.
Terramycin
n. நுண்ம ஒட்டுயிர்ப்பசை மருத்துச் சரக்கு வகை.
Terraneous
a. (தாவ) நிலவளர்ச்சியான, நில மீது வளர்கிற.
Terraqueous
a. நிலமும் நீருங்கொண்ட, நிலமும் நீருங்கொண்ட நிலவுலகஞ் சார்ந்த.
Terrarium n.
நிலவாழுயிர்களின் பேணகச்சாலை.
Terreplein
n. கொத்தளப் பீரங்கிமேடு, கைப்பிடிச்சுவருக்குப் பின்னால் பீரங்கிகள் ஏற்றிவைக்கப்படுங் கோட்டை மதிலில் மேற்புறம், கள அரணில் பீரங்கி வைப்பிடம்.
Terrestrial
n. நிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற.
Terret
n. கோப்பு வளையம், சேணப்பட்டையில் கடிவான வார் புகுந்துசெல்வதற்கான வளையம், கோப்புக்கண்ணி, சேணப்பட்டைக் கடிவாளம் புகுந்து செல்வதற்குரிய எண்ணி.
Terrible
a. அச்சந்தருகிற, பயங்கரமான, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, (பே-வ) மட்டுமீறிய.
Terribly
adv. அச்சந்தரும் வகையாக, (பே-வ) மட்டுமீறிய.
Terricolae
n. நிலத்துள் வாழ் புழுவினம், மண்புழு இனம்.
Terricolous
a. நிலத்தினுள் வாழ்கிற, நிலமீது வாழ்கிற.
Terrier
-1 n. அகழ்நாய், உறுதியான கட்டமைப்பும் சுறுசுறுப்புமுள்ள, (வர) வாரக்குடியாண்மைத் தொகுப்பேடு, பண்ணையாட்சியில் குடியாண்மையாளர் மேலாண்மை ஏற்பு விவரத் தொகுப்பேடு.
Terrier
-2 n. நிலவுடைமைப் பதிவேடு, விளக்க விவரப் பட்டியல், (வர) வாரக்குடியாண்மைத் தொகுப்பேடு, பண்ணையாட்சியில் குடியாண்மையாளர் மேலாண்மை ஏற்பு விவரத் தொகுப்பேடு.
Terrific
a. அச்சமூட்டடுகிற, திகிலுட்டுகிற.
Terrify
v. அச்சுறுத்து, திகிலடையச் செய்.
Terrigenous
a. மண்ணிலிருந்து தோன்றிய.