English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tetrarch
n. மண்டல ஆளுநர், ரோமப் பேரரசில் நாற்பெரு மண்டலங்களுள் ஒன்றன் ஆட்சியாளர், வட்டார ஆளுநர், துணையாட்சி முதல்வர், துணைநிலை இளங்கோவர், தானைத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே சிறுபடைப் பிரிவின் தலைவர்.
Tetrarchate
n. மண்டல ஆளுநர் பணி, மண்டல ஆளுநர் ஆட்சி எல்லை, மண்டல ஆளுநர் ஆட்சிக்கால எல்லை.
Tetrarchical
a. மண்டல ஆளுநர் பதவி, தானைத்தலைமை, பண்டைக் கிரேக்கர் படைப்பிரிவில் சிறு பிரிவின் தலைமை,.
Tetrastyle
n. நாற்கால் மண்டபம், நாற்காற் கட்டிடம்.
Tetrasyllabic
a. நாலசைச் சீருடைய.
Tetrasyllable
n. நாலசைச்சொல்.
Tetrathlon
n. நான்கு நிகழ்ச்சி ஆட்டப்பந்தயம்.
Tetronal
n. வசியமோகன மருந்துச் சரக்கு.
Tetterwort
n. மருந்துச் செடிவகை.
Teturnless
a. ஆதாயமற்ற, திருப்பி அனுப்பப்படக்கூடாத, மீட்டனுப்ப வேண்டாத.
Teuton
n. டியூட்டானிக் இனக் குடிமகன், (வர) கி.மு.4-ஆம் நுற்றாண்டு டியூட்டானிக் இனக்குழு.
Teutonic
n. டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி, (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த.
Teutonization
n. டியூட்டானிக் இனக்குழுப் பற்று, டியூட்டானிக் இனக்குழுமீதுள்ள ஆர்வநம்பிக்கை, செர்மானிய இனமொழி நுல் கலைப்பண்பாட்டாய்வுத் துறை, செர்மன் பண்பு முனைப்பு.
Teutonize, v.
டியூட்டானிய இனக்குழு வழியாக்கு, டியூட்டானியப் பண்பூட்டு,டியூட்டாணிய மயமாக்கு, செர்மன் மயமாக்கு, செர்மன் மயமாகு.
Text
n. முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு.
Textbook
n. பாடநுல், கல்விக்குரிய சட்டமுறை ஏடு.
Text-hand
n. பெருங்கையெழுத்து.
Textile
n. நெய்பொருள், (பெயரடை) நெசவு சார்ந்த.