English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tolerant
a. பொறுதியுடைய, சகிப்புத்தன்மை வாய்ந்த, பொறுத்தமைவுப்பண்புடைய, இசைவமைவு காட்டுகிற, ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற, கண்டிக்காது விடுகிற, வெறுப்புக்காட்டாதிருக்கிற, ஒத்துடந்தையாயிருக்கிற, மட்டின்றி இளக்கங்காட்டுகிற, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, கருத்துச்சுதந்திரம் அளிக்கிற, சமயசமரச மனப்பான்மையுடைய, சமயசமரசங் காட்டுகிற, சமயசமர சச் சார்புகொண்ட, சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற, (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த, (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க, (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Tolerate
v. பொறுத்துக்கொள், சகிப்புத்தன்மைகாட்டு, ஒப்புரவுகாட்டு, கண்டிக்காது விடு, பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர், தடைசய்யாது, இடங்கொடு, விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள், செயலிசைவு காட்டு, செய்யவிடு, செயலிசைந்திரு, செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு, வாழவிடு, வாழவிட்டிசைந்து வாழ்வுகொள், இசைவமைதிகாட்டு, ஒத்திசைந்தமை, சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு, தாங்கு, பொறு, பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு, செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு, ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு, (மரு) மருந்து-தட்பவெப்பநிலை, ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Toleration
n. பொறுத்தமைதல், வாழவிட்டு வாழ்தல், சகிப்புத்தன்மை, பொறுதி, பொறுத்தமைவு, ஏற்றமைவு, சமரச மனப்பான்மை, ஒத்துடம்படு நிலை, ஒப்பிசைவமைதி, கருத்துச் சுதந்திர அமைதி, ஒப்புரவாண்மை, சிறுபாண்மைக் காப்பிணக்க அமைதி.
Tolerationist
n. சமயசமரசக்கோட்பாட்டாளர், சமரசக் கோட்பாட்டு ஆதரவாளர்.
Toll
-2 n. சேகண்டை ஒலி, கண்டாமணி ஓசை, (வினை) சேகண்டையடி, மணிஓசை முழங்கு, மணிஓசை முழக்குவி, சேகண்டையடித்து அழை, சேகண்டை அடையாள ஒலி எழுப்பு, சேகண்டை அடையாள ஒலி மூலம் செய்தி அனுப்பு, சேகண்டையடித்துத் தெரிவி, சாமணியடி, இழவிக்குறிப்பாக மணியடி.
Toll, man
சுங்கவாணர், சுங்கத்தண்டலர்.
Toll,-bridge
சுங்கக்கடவுப் பாலம்.
Tollable
a. சுங்கம் பிரிக்கத்தக்க, சுங்கவரிக்குட்பட்ட.
Toll-bar
n. சுங்கவரி எல்லைத்தடுப்பிடம்.
Tollbooth
n. சந்தைச் சுங்கச்சாவடி, சந்தைவரி வாங்குமிடம், (பழ) நகரக் காவற்கூடம்.
Toll-call
n. தொலைபேசிக் குறுந்தொலை அழைப்பீடு.
Toller
-1 n. சுங்கத் தண்டலர், சுங்கம் பிரிப்பவர்.
Toller
-2 n. மணியோசை முழக்குபவர், சேகண்டையர்.
Toll-free
a. சுங்கவரியற்ற, (வினையடை) சுங்கவரியில்லாமல்.
Toll-gate
n. சுங்கச்சாவடி, சவுக்கை, சுங்கக்கடவு வாயில்.
Toll-gatherer
n. சுங்கத் தண்டலர்.
Tollhouse
n. சுங்கத் தண்டலகம்.
Tolling
n. மணியடிப்பு, மணியோசை முழக்கு, சேகண்டை முழக்கு.
Tolll
-1 n. சுங்கவரி, பாலச்சுங்கம், பாதைவரி, சந்தைவரி, மாவரைப்பாளர், மாப்பங்குக் கூலி, உயிர்க்காவு, உயிர்ப்பலி, தொலைபேசிச் சிறுதொலை அழைப்பீடு, (வினை) சுங்கமாகக் கொள், சுங்கமாகக் கொடு, உயிர்க்காவு கொள், உயிர்ப்பலியாகக் கொள்.
Toll-traverse
n. ஊடுவரிச் சங்கம், தனிப்பட்டவர் நில வழிச் செல்லுதற்காக வாங்கும் சுங்கவரி.