English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tollvision
n. தனிநிலைத் தொலைக் காட்சிமுறை, கட்டணத்துக்கு அளிக்கப்படும் தனியார் தொலைபேசி அமைவு.
Tolu, tolubalsam
n. சாம்பிராணி வகை, தென் அமெரிக்க மணப்பிசின் வகை.
Tom
-1 n. தாமஸ் என்ற பெயரின் செல்லமான சுருக்கக்குறிப்பு.
Tom
-2 n. சே, விடை, விலங்கின் ஆண்.
Tom Fool, tomfool
மட்டிக்கோமாளி, (வினை) மட்டிக் கோமாளியாகச் செயலாற்று, மட்டிக்கோமாளித்தனமாக நட.
Tomahawk
n. மழு, வடஅமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கோடாரி, (வினை) மழுவெறிந்து வெட்டு, போர்க்கோடாரியை வீசியெறி.
Tomatidine
n. வீரிய ஊக்கு மருந்தாகப் பயன்படும் தக்காளிச்சத்து.
Tomatin
n. தக்காளிச் சத்து மருந்து வகை.
Tomato
n. தக்காளி, தக்காளிப்பழம், தக்காளிச்செடி.
Tomb,
கல்லறை, சன்தி, கல்லறைக்கிடங்கு, (வினை) கல்லறையிலிடு, சமாதிவை.
Tombac, tombak
தம்பாக்கு, அணிமணிகளுக்குப் பயன்படும் செம்பு துத்தநாகக் கலவை.
Tombola
n. யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
Tomboy
n. தெறியாட்டப்பெண், சாகசப்பெண்.
Tombstone
n. நடுகல், கல்லறைக்கல்.
Tomentose, tomentous
சடைக்குச்சமுடைய.
Tomentum
n. (தாவ) தண்டுகளிற் காண்ப்படும் சடை மயிர்க் குஞ்சம், (உள்) மூளையின் சுழிமுனைக் குச்சம்.
Tomfoolery
n. கோமாளிக்கூத்து, கேலிக்கூத்து.
Tomfoolish
n. சிறுபிள்ளைத்தனமான, கோமாளிக்கூத்தான.
Tommuy-gun
n. இயந்திரச் சிறு பீரங்கி.