English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unavailable
a. கிடைக்காத, கைவசமாக இல்லாத.
Unavailing
a. பயனற்ற, வீணான, விழலுக்கு இறைத்த நீரான.
Unavenged
a. பழிதீர்க்கப்படாத.
Unaverted
a. தடுத்து நீக்கப்பெறாத.
Unavoidable
a. தவிர்கக்கூடாத, தவிர்க்கமுடியாத.
Unavowed
a. ஒப்புக்கொள்ளப்பெறாத.
Unaware
a. தெரிந்திராத நிலையில் உள்ள, செய்திதெரியாத.
Unawares
n. திடுக்கீடு, (வினையடை.) எதிர்பாராத வகையில, திடுமென, தன்விழிப்பற்ற நிலையில்.
Unawed
a. அஞ்சி ஒடுங்காத, அச்சுறுத்தி ஒடுங்கப் பெறாத.
Unbacked
a. ஆதரிக்கப்படாத, ஆதரவாளரற்ற.
Unbaffled
a. ஊக்கந் தடைப்படாத, மருண்டுவிடாத.
Unbag
v. பையினின்றும் வௌதயே எடு.
Unbailable
a. பிணையில் விடத்தகாத.
Unbaited
a. தூண்டிலிரையற்ற, தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற.
Unbaked
a. வேகாத, அரைகுறை வேக்காடுடைய, முதிராத.
Unbalance
n. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு.
Unbalanced
a. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற.
Unballast
v. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு.
Unbalmable
a. குற்றங்கூற முடியாத.
Unbank
v. சாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய், எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய்.