English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Underskin
n. அடித்தொலி, தோலடி மென்தோல்.
Underskirt
n. உட்பாவாடை, அடிப்பாவாடை, அடியோர ஆடைத்தொங்கல்.
Undersky
n. வானடி, வான வளாகத்தின் அடிப்பக்கம்.
Undersleeve
n. அடித்துணைக் கைம்மடி, கழற்றக்கூடிய சட்டைக் கைமடிப்படியிலுள்ள கைமடிப்பு.
Undersoil
n. அடிமண், அடிநிலமண், அடிநிலம்.
Undersong
n. பல்லவி, பாடலின் பன்முறை மடக்குவரி, இடைமடக்குவரி, (இசை.) உட்சுரத் தொடர்வு.
Understaffed
a. பணியாளர் எண்ணிக்கை போதாத.
Understand
v. அறி, உணர், புரிந்துகொள், பொருள் தெரிந்துகொள், இயல்பு அறிந்துகொள், பாங்கு அறி, போக்கு உணர், சிறப்புக் கண்டுணர், காரணம் இன்னதென்று கண்டுகொள், குறிப்பறி, நோக்கமறி, ஆள்வகையில் பண்பறி, செயல்வகை தெரிந்திரு, கருத்தில் வாங்கிக்கொள், மனத்தில் வாங்கிக்கொள், கிரகித்துக்கொள், உய்த்துணர், குறித்துணர், அவாய் நிலையாகக் கொண்டுணர், கேள்வியுறு, கேள்விப்படு.
Understandable
a. அறியக்கூடிய, ஒத்துணர்ந்து பார்க்கக்கூடிய, ஒத்துணர்ந்து காணப்படத்தக்க.
Understander
n. அறிபவர், ஒத்துணர்பவர், ஆதரவான.
Understanding
n. அறிவாற்றல், உணருந்திறம், அறிவு உள்ளத்தின் அறிவுத்திறம், பற்றுணர்வுத் திறம், புரிந்து கொள்ளும் ஆற்றல், பொருளறி திறன், மனத்தின் வாங்கும் திறன், கருத்தேற்புத் திறம், உடன்பாடு, மன ஒத்திசைவு, உள் உடன்படிக்கை, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, (பெ.) புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய, உய்த்தறி திறமை வாய்ந்த, ஒத்துணர் திறமுடைய, மனத்தில் வாங்கிக்ரகொள்ளும் ஆற்றலுடைய.
Understate
v. குறைத்துக்கூறு, மெய்ம்மைநிலை குறைத்தியம்பு.
Understatement
n. குறையுரை, குறைமதிப்பீட்டுரை.
Understeer
n. உந்துகலத்தில் திருப்பாழியின் மட்டுமீறிய மெல்லிசைப்பு.
Understock
-1 n. (பழ.) காலுறை.
Understock
-2 v. குறைபடக் கையிருப்பு வழங்கு, கடை-பண்ணை ஆகியவற்றின் வகையில் போதாக்கையிருப்பு வழங்கு.
Understood
-1 a. தொக்கி நிற்கிற, குறிப்பால் உணரப்பட்ட.
Understood
-2 v. 'அண்டர்ஸ்டாண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Understrapper
n. கீழ்த்தர வேலையாள், இழிஞர்.
Understrapping
a. கீழ்நிலையிலுள்ள, பணிவகையில் அடிநிலையிலுள்ள.