English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Velvet
n. வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம்பட்டுத் துணி வகை, இள மான் தோல் மென்மயிர், ஆதாயம், இலாபம், (பெ.) வெல்வெட் போன்ற, மென் பூம்பட்டாலான.
Velvet-duck
n. சுட்டி வாத்து, இறகில் வெண்குறியுடைய கருவாத்து வகை.
Velveted
a. மென்பூம்பட்டாலான, மென்பூம்பட்டாடையணிந்துள்ள.
Velveteen
n. பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை, பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை.
Velvetiness
n. மென்பூம்பட்டுப் போன்ற தன்மை, பட்டியல் மென்மை.
Velveting
n. மென்பட்டுத் துணிவகைத் தொகுதி, மென்பட்டுத் துணியின் மென் துய்ப்பரப்பு.
Velvety
a. மென்பூம்பட்டுப் போன்ற, மென்மையான, மெத்தென்ற.
Vena
n. (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம்.
Vena cava
n. (ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று.
Venal
-1 a. விற்கப்படுவதற்குரிய, பணத்துக்கு ஆட்படுகிற, இவறன்மாலையரான, பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற, கூலிக்கு உழைக்கிற, பண அவாவுள்ள, கைக்கூலி வாங்குகிற, நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற.
Venal
-2 a. குருதிநாளச் சார்பான, உள்நாளங்களையுடைய, உள்நாளங்கஷீலடங்கிய, உள்நாளங்கஷீலுள்ளவை சார்ந்த.
Venality
n. கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு.
Venally
adv. கூலிக்கு உழைக்கும் முறையில், பொறுப்பிலா இஸீதகவு முறையில்.
Venatic, venatical
வேட்டை சார்ந்த.
Venation
-1 n. உள்நாள வரியமைதி, இலையின் இழைநாளப் பாங்கமைதி, இறகின் வரி நரம்பமைதி.
Venation
-2 n. (அரு.) வேட்டை, வேட்டையாட்டு, நாயாட்டு.
Venatorial
a. வேட்டை சார்ந்த.
Vend
v. (சட்.) விற்பனை செய், விற்பனைத் தொஸீலாற்று, சிறுதிறக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, சிறுபொருள்கள் வகையில் விற்பனையாகக் கொடு, விலைக்குக் கொடு.
Vendace
n. சிறிய ஏரிமீன் வகை.
Vendean
n. மேற்கு பிரான்சிலுள்ள வெண்டீ பகுதி வாழ்நர், மேற்கு பிரான்சில் 1ஹ்ஹீ3-5 ஆண்டுகஷீல் அரசர் கட்சியை ஆதரித்தவர், (பெ.) மேற்கு பிரான்சிலுள்ள 'வெண்டீ'யைச் சார்ந்த, வெண்டீ அரசர் ஆதரவுக் கட்சியினைச் சார்ந்த.