English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Velar
a. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய.
Veld
n. கரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு.
Velitation
n. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை.
Velite
n. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன்.
Velleity
n. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
Vellicate
v. (அரு.) சட்டென்று இழு, வெடுக்கென்று பற்றியிழு, கவனத்தை இழு.
Vellication
n. திடீர்ச் சுரிப்பு, வெட்டிழுப்பு, சுருக்கெனக் கவனமீர்த்தல்.
Vellum
n. வரைநயத்தோல், கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை, வரைமென் தோல் கையெழுத்துப்படி.
Velocipdean
n. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
Velocipede
n. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை.
Velocipeder
n. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
Velocitization
n. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
Velocitize
v. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல்.
Velocity
n. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
Velours
n. தொப்பிகள் செய்யப் பயன்படும் மெத்தென்ற பூம்பட்டு வகை.
Veloutine
n. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை.
Velum
n. பின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு.
Velure
n. வெல்வேட் போன்ற மென்பட்டு வகை, தொப்பிகளுக்கு மென்மையஷீக்கும் பட்டுத்துணி, (வி.) பட்டுத்துணியிட்டு மென்மையாக்கு.
Velutinous
a. (தாவ., பூச்.) மென்பட்டுப் போன்ற, மெத்தென்ற.
Velveret
n. கீழ்த்தரமான வெல்வேட் துணி வகை, தாழ்ந்த தர மென்பட்டுத் துணி வகை.