English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vauntingly
adv. வீம்பாக, வீம்புரையாக.
Vavasory
n. மேலாட் குடியாண்மை அதிகார எல்லை, மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம்.
Vavasour
n. மேலாட்குடியாள், பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர்.
Vealy
a. (பே-வ.) கன்றிறைச்சி போன்ற, முதிராத, பக்குவம் அடையாத.
Vectograph
n. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
Vector
n. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
Vedanta
n. (ச.) வேதாந்தம், இந்திய சமயத் தத்துவ ஞானம்.
Vedda
n. வேடர், இலங்கைப் பழங்குடி வகையினர்.
Vedette
n. காவற்குதிரை வீரன், அரண்புறக் காவல் நிலையமைப்பதற்கு முன் நிறுத்தப்படும் புறஅரண் காவற் குதிரை வீரன்.
Vedic
n. கீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ, (பெ.) வேதம் சார்ந்த, வேதத்திலுள்ள, வேதங்கஷீல் குறிக்கப்படுகிற, வேத வழக்கான.
Vedist
n. வேதாந்தி, வேதப்பயிற்சி வல்லவர், வேதங்கஷீல் வல்லவர்.
Veer
v. திசை மாற்று, திசைமாற்றித் திருப்பு, காற்று வகையில் திசைமாறித் திரும்பு, திசை மாறு, மனத்தை மாற்று, நடத்தை-மொஸீ மாற்றிக்கொள், மொஸீப்பண்பு மாற்று, கருத்து மாறுபடு, பண்பு மாறுபடு, காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு, (கப்.) கப்பலின் வேகத்தைக் குறை, தளர்த்து.
Vega
-1 n. (ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம், கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம், கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
Vega
-2 n. சோதி நட்சத்திரம், வடக்கு விண்மீன் குழுவில் ஒஷீமிக்கதொரு விண்மீன்.
Vegan
n. சித்த உணவினர், எவ்வகை உயிரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினர், (பெ.) சித்த உணவினரான, எவ்வகை உயரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினரான.
Vegetable
n. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட.
Vegetal
n. தாவரம், காய்கறி வகை, (பெ.) தாவர இயல்புடைய, காய்கறி சார்ந்த, விலங்குகளுக்கும்-தாவரங்களுக்கும் பொதுவான.
Vegetarian
n. காய்கறி உணவு உண்பவர், சைவச் சாப்பாட்டாளர், புலால் உண்ணாதவர், பால்முட்டையின்றிப் பிற கறி உணவு உண்கிற, புலாலுண்ணாத, ஊனுண்ணாத.