English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vexillation
n. தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி.
Vexillum
n. பண்டை ரோமர் வழக்கில் தானைக் கொடி, தானை, சமய மாவட்ட முதல்வர் பணிமுறைக்கோல் துகில், இறகின் துய்யிழை, (தாவ.) பதாகை, அவரையின் மலர் மீயிதழ்.
Vexingly
adv. எரிச்சல் தரும் வகையில்.
Via media
n. (ல.) இடைநிலை நெறி, பொது இடையீட்டு முறை.
Viability
n. ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை.
Viable
a. வாழக்கூடிய, ஒப்பேறக்கூடிய, உருப்படக்கூடிய, வளம்பெறக்கூடிய.
Viaduct
n. பாலம், மேம்பாலப்பாதை.
Vial
n. சிறு குப்பி, புட்டி.
Vialled
a. குப்பியில் அடைக்கப்பட்டுள்ள.
Viameter
n. சகடத் தொலைவுமானி, மிதிவண்டித் தொலைவுமானி.
Viands
n. pl. உண்டி வகைகள், உணவுப்பண்ட வகைகள், துணையுணவு வகைகள்.
Viaticum
n. அரசாங்க அலுவலர் பயணப்படி, இறுதிக் காலத் தெய்வ நற்கருணை வினை முறை, இயங்கு திருநிலைப் பீடம்.
Vibraculam
n. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
Vibrant
a. அதிர்கிற, அதிர்வலைவுடைய, துடிப்பதிர்வுடைய, உடல் சிலிர்க்கச் செய்கிற, உணர்ச்சியூட்டுகிற, ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய.
Vibrate
v. அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு.
Vibratile
a. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய.
Vibratility
n. அதிர்வுறுந்தன்மை.
Vibration
n. அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.