English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Visitator
n. பணிமுறைக் கண்காணிப்பு வருகையாளர்.
Visitatorial
a. மேற்பார்வையீடு சார்ந்த, பணிமுறை மேற்பார்வையீட்டாளருக்குரிய.
Visitee
n. வருகையேற்பவர்.
Visiting
n. சேறல், மேற்பார்வையீடு, தெய்வப்பஸீ சுமத்தீடு செய்தல், திருவருட்பேறு வழங்கீடு, பெரும்பரிசு வழங்கீடு, உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை ஏற்றம், (பெ.) வருகை தருகிற, மாணவர்-பேராசிரியர்-மருத்துவர் முதலியவர் வகையில் புறம் நின்று வருகைதருகிற, இடைவரவான, நிலையாகத் தங்கியிராத, திருவருகை சார்ந்த, மேற்பார்வையீட்டிற்குரிய.
Visiting-book
n. வருகையாளர் பெயர்ப்பதிவுப் பேரேடு.
Visiting-card
n. வருகையாளர் முகவரிச்சீட்டு.
Visiting-day
n. காட்சியாளர் நாள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்காக ஒதுக்கிவைக்கப்படும் நாள்.
Visitor
n. வருகையாளர், வருநர், பார்வையாளர், கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர், மேற்பார்வையீட்டாள், விருந்தினர், புறநின்று வருபவர், புறநின்று வருவது.
Visitress
n. மேற்பார்வை மாது.
Visor
n. கவசமுகத் தகடு, தொப்பி உந்து விஷீம்பு, முகமூடி.
Visored
a. முகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட.
Vista
n. சாலை, மர அணிவரிசை, காட்சி வரிசை, நெடுநீள் நிகழ்ச்சித் தொடர், பின்னணிக் கருத்துக்கோவை, வருங்காலம் பற்றிய கருத்தணிக்கோவை.
Vistaed
a. அணிவரிசைக் காட்சியுடைய, மரம் பயில் சாலையுடைய.
Visual
a. காட்சி சார்ந்த, பார்வைக்குரிய, காட்சித்தொடர்பான, காட்சியில் பயன்படுத்தப்படுகிற, பார்வையாற்றலால் பெறப்பட்ட, மனக்காட்சிக்குரிய, மனக்காட்சியியல்பான.
Visual-aural range
n. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை.
Visuality
n. காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு.
Visualize
v. உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண்.
Visuals
n. pl. கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள்.
Vita glass
n. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை.