English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whilst, conj.
(பழ.) பொழுதிலேயே.
Whim
n. தற்போக்கெண்ணம், விளையாட்டு மனப்போக்கு, திடீர்த்திடீர் நினைவு, திடீர் ஆர்வக்கரத்து, சபலக் கருத்து, எண்ணக்கோளாறு, சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி.
Whimbrel
n. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
Whimmy
a. சபலக்கருத்து வாய்ந்த, மனம்போன போக்குடைய.
Whimper
n. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு.
Whimsical
a. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய.
Whimsy
n. திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய.
Whimwham
n. விளையாட்டுக் கருவி, விளையாட்டுப் பொறி, சிறுபிள்ளைத்தனமான செய்தி.
Whin
-1 n. மஞ்சள் நிற மலர்ச்செடிவகை.
Whin
-2 n. திண்ணிய பசுமைநிறத் தீக்கல் பாறைவகை, அழுத்தமான மணற்பாறை வகை.
Whinchat
n. சிறு பறவை வகை.
Whine
n. நெடுங்குரல் ஊளை, ஏங்கு அழுகுரல், சிணுக்கம், குறை தெரிவிப்பழுகை, புலம்பல், உளறல், (வினை.) நெடுங்குரல் ஊளையிடு, ஏங்கியழு, அழுது குறைதெரிவி, சிணுங்கு, புலம்பு,உளறு.
Whinger
n. கட்டாரி, குத்துவாள், சூரிக்கத்தி.
Whinny
n. மகிழ்ச்சி தெரிவிக்குங் கனைப்பொலி, (வினை.) கனை, மகிழ்ச்சியாகக் கனைகுரலெழுப்பு.
Whip
n. சாட்டை, கசை, சாட்டையடி, கசையடித் தண்டனை, மிலாறு, சுள்ளிக்கிளை, காற்றாலைப் பாய்மரக் கை, வண்டியோட்டி, நாயாட்டி, வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர், கட்சிக் கொறடா, கட்சிக் கொறடாவின், கட்டளைச் சுற்றறிவிப்பு, கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி, கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம், இழைமடித் தைப்பு, எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி, பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு, வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர், (பே-வ) கணம், நெடி, (வினை.) கசையாலடி, சாட்டையால் சொடுக்கிடு, கசையடியால் தூண்டு, சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு, கசையடித் தண்டனையளி, அடித்துத் துரத்து, அடித்தோட்டு, ஒறுத்துத்திருத்து, அடித்தடக்கு, வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டு,கட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு, சாடு, கண்டி, வசைபேசித் தாக்கு, விரைந்து இயக்கு, வேகமாகப் பாய்வி, வீசி எறிந்து செலுத்து, பாய்ந்து செல், சரேரென இயங்கு, வெட்டிப்பறி, வெட்டித்தள்ளு, வெட்டிவீசு, சட்டென நகர்ந்து செல், அடித்துக்கலக்கு, முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை, தூண்டிலெறி, தூண்டிலிட்டு மீன்பிடி, கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு, கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு, சுற்றிக் கட்டு, இழைமடித்தையல் இடு, நீட்டுமேலோட்டத்தையல் போடு, நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று, (இழி.) தோற்கடி, வென்று மேம்படு, விஞ்சு.
Whip-and-derry
n. பாரஞ்சாம்பி, கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி.
Whip-cord
n. சாட்டைக்கயிறு.