English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wherefrom
adv. எங்கிருந்து, எதனிடமிருந்து.
Wherein
adv. எதனில், எது வகையில், இதனில், இதுவகையில், கூறப்பட்ட இதன் வகையில்.
Whereinsoever
adv. எங்காயினும், எதுவகையிலாயினும், எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம்.
Whereinto
adv. எதனுள், இதனுள்.
Whereof
adv. எதனால், எதுகொண்டு, எதுகாரணமாக,எதன் மூலமாக, எதுபற்றி, இது காரணமாக, மேற்குறிப்பட்டது பற்றி, இதனுடைய, மேற்குறிப்பிட்ட அதனுடைய.
Whereon
adv. எதன்மேல், எதன்மீது, எதனையடுத்து, இதன்மீது, இதனையடுத்து, இதன்பயனாக.
Whereout
adv. எதனின்று, எதனிடமாக, இதனின்று,இதனிடமாக.
Whereso, wheresoeer, wheresoever, rel
adv. எங்காயினும், எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
Wherethrough
adv. எதன்மூலமாக, இதன் மூலமாக.
Whereto
adv. எதற்கு, இதற்கு, இது வகையில.
Whereunder
adv. எதன் கீழே, இதன் கீழே, இதனடியில், இதன்சார்பாக.
Whereunto
adv. எதற்கு, என்ன காரணத்தைக் கொண்டு, எந்நோக்கத்துடன், இது வகைக்கு, இக்காரணத்தைக் கொண்டு, இந்நோக்கத்துடன்.
Whereupon
adv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக.
Wherever
adv. எங்கேதான், எங்காயினும், எங்குவேண்டுமாயினும், எங்குவேண்டுமானாலும் அங்கெல்லாம்.
Wherewith
adv. எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு,இதன்மீது.
Wherewithal
n. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது.
Wherry
n. பரிசல், ஆனேற்றிச்செல்லும் தட்டைப்படகு.
Wherryite
n. இளம்பச்சை நிறக் கனிம வகை.
Whet
n. அராவுகை, தீட்டுகை, கூராக்குதல், சாணைபிடிப்பு, விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு, (வினை.) அராவு, தீட்டு, கூராக்கு, சாணைபிடி, பசிதூண்டு, அவாத்தூண்டு, பசிபெருக்கு, அவாப் பெருக்கு.
Whether
-1 pron (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த.