English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wheezy
a. ஊகமூச்செறிகிற, உஸ் என்று ஒலிக்கிற.
Whelk
-1 n. ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
Whelk
-2 n. முகப்பரு, பரு.
Whelm
v. வாய்மடு, விழுங்கு, அமிழ்த்து, மூழ்கடித்துவிடு, உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
Whelp
n. நாய்க்குட்டி, சிங்கக்குருளை, கரடிக்குட்டி, விலங்கின் சிறு குருளை, பையல், (வினை.) நாய்க்குட்டி ஈனு, இழி வழக்கில் பிள்ளைபெறு, தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
When
n. நிகழ்ச்சிக்காலம், நிகழ்ச்சிநேரம், நிகழ்ச்சிக்கால வரையறை, நிகழ்ச்சிக்கால இடச்சூழல், எந்தக்காலம், எந்தநேரம், என்ற காலம், என்ற சமயம், என்பதற்குரிய வேளை, எப்பொழுது என்ற செய்தி, (வினையடை.) எப்பொழுது, எந்தச்சமயம், என்றைக்கு, எந்தக் காலம், பொழுது, என்ற பொழுதில், என்பதை அடுத்து, என்றவுடன்.
When the balloon goes up
நடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
Whenas, conj.
(பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால்.
Whence
n. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால்.
Whencesoever
adv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும்.
Whenever whensoever
adv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது.
Where
n. நிகழ்ச்சியிடம், செய்தியின் நிலைக்களம், எந்த இடம், என்ற இடம், எங்கே என்ற செய்தி, எந்த இடத்தில் என்பது, (வினையடை.) எங்கே, எந்த இடத்தில், எந்தஇடத்திற்கு, எந்த இடம் நோக்கி, எந்தப்பகுதியில் எவ்வகையில், (வினையடை.) என்ற இடத்தில், என்ற நிலையில்.
Whereabout
adv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று.
Whereabouts
n. இருப்பிடம், கிடக்கை.
Whereagainst
adv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக.
Whereas, conj.
ஆகையால், அப்படியிருக்க.
Whereat
adv. அதன்பேரில், இதன் பேரில்.
Whereby
adv. எது காரணமாக, எதனால், இது காரணமாக.
Wherefore
adv. எதற்காக, எக்காரணத்திற்காக, ஏன், இந்தக் காரணத்தால்.
Wherefores
n. pl. காரணங்கள்.