English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whiskified
a. சாராயங் குடித்த, குடி மயக்கமுடைய.
Whisking
n. வாலாட்டம், தெறிப்பாட்டம், தூசுதுடைப்பு, (பெ.) வாலாட்டுகிற, சட்டெனத் தெறித்து வீசுகிற, வேகமாக ஆட்டுகிற, துடிதுடித்தாடுகிற, துடைத்தகற்றுகிற, தூசுதட்டுகிற.
Whisky
-1 n. மாத்தேறல், சாராயம்.
Whisky
-2 n. பளுவற்ற குதிரை வண்டி வகை.
Whisky-frisky
a. அரைக்கிறுக்கான, அறிவு திரிந்த, மனம்போன போக்கான.
Whisky-liver
n. சாராய நச்சால் ஏற்படும் ஈரல்நோய்.
Whisper
n. குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்.
Whisperer
n. காதுகடிப்பவர், இரகசியமாகப் பேசுபவர்.
Whispering
n. மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற.
Whispering-dome, whispering-gallery
n. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம்.
Whist
-1 n. யோகத்திறச் சீட்டாட்டம், நால்வர் அல்லது இருவர் ஆடும் அரைத்திற அரையோகச் சிட்டாட்ட வகை.
Whist
-2 a. (பழ.) வாய் பேசாத, சட், சும்மா இரு.
Whistle
n. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு.
Whistle-fish
n. சீழ்க்கை மீன்.
Whistler
n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது.
Whistle-stop
n. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம்.
Whit
n. இம்மியளவு, மிகச் சிறிய அளவு.
White
n. வெண்மை, வெண்ணிறம், வெண்ணிறச் சாயல், வெண்ணிறப்பொடி, வௌளாடை, வெண்ணிறப் பொருட்கள், முட்டை வெண்கரு, கண்ணின் வௌளை விழி, ஐரோப்பியர், வண்ணத்துப்பூச்சி வகை, (பெ.) வெண்ணிறமான, கதிரவனின் வெண்கதிர்களை எதிரடிக்கிற பரப்பினையுடைய, வெண்பனி போன்ற, வௌளுப்புப் போன்ற, அன்னத்தூவி ஒப்பான நிறமுடைய, வெண்ணிறச் சாயலுடைய, வெண்மைச் சார்பு மிக்க, நீர்-காற்று வகையில் நிறமற்ற, ஔத ஊடுருவக்கூடிய, வௌளை மனமுடைய, கள்ளங்கபடமற்ற, கறையற்ற, மாசுமறுவற்ற, தீங்கற்ற, வௌளையர் இனஞ் சார்ந்த, ஐரோப்பியருக்குரிய, அரசர் கட்சியை ஆதரிக்கிற, புரட்சியாளரை எதிர்க்கிற,ஏற்றமையத்தக்க, ஒப்பிசைவளிக்கக்கூடிய.
White-admiral
n. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை.
White-ale
n. மாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை.