English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clairaudient
n. புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர், (பெ.) சேணோசயுடைய, புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய, புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
clairschach
n. கெல்டிய இனமக்கள் கையாண்ட தந்திக் கம்பிகளுடன் கூடிய பழைய யாழ்வகை.
clairvoyance
n. தொலைவிலுணர்தல், உண்ணோக்கு, புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
clairvoyant
n. கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர், (பெ.) புலனாகாவற்றைக் காணும் திறனுடைய.
clam
-1 n. இடுக்கி, இறுக்கிப்பிடிக்கும் கருவி, எதிர் எதிராயுள்ள பாகங்கள் திருகாணியினால் இறுக்கப்படத்தக்க அழுத்தக்கருவி, (வி.) பற்று, இடுக்கு, இடைவைத்தழுத்து, (பே-வ.) வாய்மூடு, பேசாதிரு.
clam-bake
n. சிப்பி வறுவல், சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை, சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவெளி விருந்துக் குழு.
clam-chowder
n. சிப்பிமீன் கலந்து செய்யப்படும் பணியார வகை.
clam-shell
n. சிப்பி மீனின் தோடு, சிப்பி.
clamancy
n. அவசரத்தன்மை, பொறுதியற்ற படபடப்பு.
clamant
a. உரக்கக்கூவுகிற, அவசரமான, வற்புறுத்துகிற.
clamber
n. இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி, (வி.) தொற்றி ஏறு, தந்தித்தாவு, கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல்.
clammy
a. ஒட்டிக்கொள்கிற, பசைபோன்ற, ஈரமான.
clamorous
a. கூச்சலிடுகிற, ஆரவாரம் செய்கிற.
clamour
n. ஆரவாரம், சந்தடி, அமளி, இடைவிடாத உரத்த கூச்சல், அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல், ஆரவார வேண்டுகோள், (வி.) ஆர்ப்பரி, உரக்கக் கேள், இடைவிடாமல் கூச்சலிடு.
clamourer
n. ஆரவாரம் செய்பவர், கிளர்ச்சிக்காரர்.
clamp
-1 n. பற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி.
clamper
v. ஒட்டுப்போட்டுச் சமாளி, போலி வேலை செய்.
clan
n. பொதுக்குடி மரபுக்குழு, ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு, பங்காளிக் கிளை, தந்தை வழியுரிமைச்சுற்றம், குலமரபு, இனம், கிளை மரபு, குறுகிய தனிப்பற்றுடைய குழு, தனிக்குழு, சிறுகுழு.
clandestine
a. கள்ளத்தனமான, ஒளிவு மறைவான, வஞ்சகமான.
clang
-1 n. உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற பேரொலி, எக்காள ஒலி, பெரிய மணியோசை, நாரை வாத்து போன்ற பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி, (வி.) கணீரென்ற ஒலி செய்.