English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
claque, claquere
(பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம்.
clarabella
n. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை.
clarence
n. நால்வர் அமர உட்புறத்திலும் வலவன் அமர வெளிப்புறத்திலும் இருக்கைகள் அமைந்த நான்கு சக்கர வண்டிவகை.
Clarenceux, Clarencieux
n. (கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர், இரண்டாம் கட்டியர்.
clarendon
n. கனத்த முகப்புவாய்ந்த அச்செழுத்து வகை, (பெ.) கனத்த முகப்பு வாய்ந்த.
claret
n. பிரான்சிலுள்ள போர்டோவிலிருந்து தருவிக்கப்படும் திண்சிவப்பு இன்தேறல் வகை, (பெ.) திண் சிவப்பு நிறம் வாய்ந்த, (வி.) திண் சிவப்பு இன்தேறல் அருந்து.
claret-cup
n. பனிக்கட்டி-சாராயம்-சர்க்கரை முதலியவை கலந்த திண் சிவப்பு இன்தேறல் கலவை வகை.
clarient
n. (இசை.) மரத்தினாலான ஊது துளைக்கருவி வகை, இசைப் பெட்டியின் குழலிசைப்பகுதி.
clarification
n. தௌிவு, தௌிவாக்கல், துப்புரவாக்கல்.
clarifier
n. தௌிவாக்குபவர், தௌியச் செய்யும் பொருள்.
clarify
v. தௌிவுறும்படி செய், தௌிவாக்கு, துலக்கி அழுக்கு நீக்கித் துப்புரவாக்கு, பளிங்குபோல் ஆக்கு, வெண்ணெயைத் துப்புரவாக்கி நெய்யாக மாற்று, தௌிவாகு, துலங்கு, தௌிவுபடு, பளிங்கு போலாகு.
clarinettist
n. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
clarion
n. சில்லிட்டிசைக்கும் எக்காளம், எழுச்சியூட்டும் உரத்த ஒலி, எக்காள ஓசை, எக்காளத்தினது போன்ற ஓசை, (பெ.) தௌிவான, உரத்த.
clarity
n. துலக்கம், தௌிவு.
Clarkia
n. பகட்டான மலர்களையுடைய செடியினம்.
clary
n. காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
clash
n. மோதல் ஒலி, மோதுதல், கைகலப்பு, சச்சரவு, கருத்து வேற்றுமை, முரண்பாடு, (வி.) மோதொலி எழுப்பு, எதிர்த்து நில், முட்டி மோது, முரண்பாடு, சிக்கற்படு.
clasp
n. பிடிப்பு, பற்றுதல், அணைப்பு, தழுவுதல், கைகுலுக்கல், கொளுவி, அள்ளு, கச்சு இறுக்கி, ஆடை ஊக்கு, (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை, (வி.) நெருக்கிப்பிடி, பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு, தழுவு, அள்ளு வைத்துச் செருகு, அள்ளுவைக் கொண்டு பிணை.
clasp-knife
n. மடக்குக் கத்தி.
clasper
n. பற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.