English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clanging
n. கணீரென்று ஒலித்தல், (பெ.) கணீரென்று ஒலிக்கிற.
clangorous
a. அலை அலையாய் ஒலிக்கும் ஓசையுடைய, உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற ஓசைமிக்க.
clangour
n. உரத்த மணியோசை, (வி.) உரத்த மணியோசை எழுப்பு.
clank
n. கனத்த சங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை, (வி.) சங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை எழுப்பு.
clankless
a. சங்கிலியோசை எழுப்பாத.
clannish
a. குறுகிய இனப்பற்றுள்ள, மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழும் இயல்புடைய, குறுகிய குழுப்பற்றுடைய.
clannishness
n. குறுகிய இனப்பற்றுடைமை, பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
clanship
n. ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி, குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு, குலமரபு முறை, இனப்பிரிவு வேறுபாடு, இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு, குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு.
clansman
n. குலமரபினன், இனத்தவன்.
clanswoman
n. குலமரபினள், இனத்தவள்.
clap
-1 n. இடிஒலி, வெடிப்போசை, கைதட்டொலி, தட்டல், கைதட்டும் ஓசை, கொட்டல், அறை, (வி.) மொத்து, அறை, ஓசையுண்டாகும்படி அடி, திணி, திடுமென நெக்கித் தள்ளு, உடனடியாக இறுக்கிக்கட்டு, ஊக்கந்தரும் வகையில் தட்டு, அறைந்து தட்டு, கைகொட்டி ஆர்ப்பரி, கைகொட்டு, கைதட்டு, திடுமென (சிறையில்) அடை.
clap-bread
n. முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை.
clap-net
n. சுருக்கு வலை, கயிற்றை இழுப்பதனால் திடுமென மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ள புள் வலை.
clap-sill
n. கால்வாய் அணை அடைப்பின் அடிவாய்ச்சட்டம்.
clapboard
n. சாரல்தடுக்கு, மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை.
clapper
-1 n. கை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
clapperclaw
v. பிறாண்டித் தாக்கு, திட்டு, கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண்.
clappers
n. pl. விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள்.
clapping
n. அடிப்பதனால் எழும் ஓசை, கைதட்டல்.
claptrap
n. பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல், வெற்றுப்பசப்புரை, பகட்டு ஆரவாரக் கருத்து, (பெ.) பகட்டார வாரமான.