English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
class
n. பள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
class-conscious
a. வகுப்பு உணர்வுள்ள, சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
class-leader
n. கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
class-room
n. வகுப்பு அறை.
classable
a. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
classic
n. புகழ்சான்ற எழுத்தாளர், தலைமைசால் கலைஞர், பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர், பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர், புகழ்சான்ற ஏடு, பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர், செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர், (பெ.) முதல் தரமான, ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய, பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய, பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த, பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த, கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய, பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த, பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய, பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
classical
a. ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய, முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட, பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய, தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
classicism
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு, பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு, பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை, பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
classicist
n. பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர், பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர், பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
classicize
v. முதல்தரமானதாக்கு, பண்டைய கிரேக்க இலத்தீன மொழிப்பாணியைப் பின்பற்று.
classicolatry
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக் கலைத்துறையில் ஈடுபாடு.
classics
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கலைத் துறைகளின் தொகுதி, உயர்தனிச் செம்மொழித்துறை.
classifiable
a. வகைப்படுத்தத்தக்க.
classification
n. வகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
classified
a. வகைப்படுத்தப்பட்ட, பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய.
classify
v. வகைப்படுத்து, இனவாரியாகப் பிரி, வகுப்பில் இணை, பாதுகாப்பை முன்னிட்டு புதைமறைவாக்கி வை.
classman
n. பல்கலைக்கழகத் தேர்வுகளில் மதிப்பெண் நிரம்பிய வகுப்புப்பெற்றுத் தேறியவர்.
clastic
a. (மண்.) பழம் பாறைகளின் உடைந்த துண்டுகளாலான.
clatter
n. கடகட ஒலி, உரத்த பேச்சு, (வி.) சடசடவென்று ஒலி, உரத்த ஒலியெழுப்பு, ஓயாது பேசு, பிதற்று.
claudication
n. நொண்டுதல்.