English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clone
n. (உயி.) பால்படப்பிறந்த ஒரே விதையிலிருந்த பால்படாது பிறந்த செடிகளின் முழுத்தொகுதி.
clonus
n. மாறிமாறிச் சுருக்கமும் தளர்வுமாக வரும் தசைத்துடிப்பு.
cloop
n. தக்கையை இழுத்துத் திறப்பதால் உண்டாகும் ஓசை, (வி.) தக்கை திறப்பதால் ஏற்படும் ஓசை உண்டுபண்ணு.
clop
n. சடார் ஒலி, குதிரைக்குளம்படி ஓசை, (வி.) சடாரொலியுடன் செல், சடார் ஒலியுடன் செலுத்து, (வினையடை) சடாரொலியுடன்.
close
-1 n. அடைப்பு, வளைவு, தனி எல்லை, வேலியிடப்பட்ட விளைநிலம், குறுகிய தெரு, தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை, பள்ளிக்கூட விளையாட்டு வெளி, (பெ.) அடைக்கப்பட்ட, திறப்பில்லாத, காற்று வெளிச்சமில்லாத, திக்குமுக்காடுகிற, குறுகிய, கடுஞ்சினமான, அண்மையான, அணிமைக்காலத்துக்குரிய, நெருங்கிய, அடக்கமான, இறுக்கமான, நெருக்கமான, மறைக்கப்பட்ட, தனிமறைவான, புதைமறைவான, ஒதுங்கிய, (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான, (வினையடை) நெருக்கமாக, நெருங்கி, இறுக்கமாக, அண்மையில், அடர்த்தியாக, மறைவாக.
close-banded
a. நெருக்கமாக இணைக்கப்பட்ட.
close-barred
a. இறுக்கமாக மூடப்பட்ட.
close-bodied
a. உடலோடு பொருந்திய, உடம்புடன் ஒட்டினாற்போல.
close-fisted, close-handed
a. கஞ்சத்தனமான, பேராசையுள்ள.
close-grained
a. நெருக்கமாக இணைக்கப்பட்ட, அடர்த்தியான.
close-hauled
a. காற்றுவாட்டத்தில் கப்பல் புறப்பட ஆயத்தமாயுள்ள.
close-reefed
a. கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட.
close-stool
n. பெட்டியில் அடைக்கப்பட்ட கழிப்புக்கலம்.
close-up
n. மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம், நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
closed
a. அடைத்த, முடிவுற்ற, கட்டுப்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட.
closely
adv. கட்டுப்பாடாக, கவனமாக, உன்னிப்பாக, அணுக்கமுடன், மறைவடக்கமாக.
closeness
n. நெருக்கம், அடர்த்தி, ஒடுக்கம், தனி ஒதுக்கம், தொடர்பின்மை, மறைவடக்கம், அணிமை.
closer
n. முடிவு செய்பவர், முடிவாக்கும் பொருள், செங்கல் அமைப்பின் முடிவை நிறைவு செய்யும் செங்கல் பகுதி.
closet
n. சிறு தனியறை, ஒதுக்கிடம், அறையில் தனி அடைப்பிடம், மறைவிடம், கழிப்பிடம், அரசனுடைய தனிப்பேட்டி அறை, தனி வழிபாட்டு அறை, (வி.) தனி அறையில் இட்டடை, தனி அறைக்கு இட்டுச்செல், மறை, மூடு.
closet-dramma, closet-play
n. அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம்.