English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								clod
								n. மண்ணாங்கட்டி, மண்கட்டி, புல்கரண், திரள்கட்டி, நிலம், தரை, நிலக்கரிச்சுரங்கத்தின் எரிதாக்கு கடுங்களிப்படுகை, மனித உடல், அறிவிலி, மூடன், எருதின் சொரசொரப்பான கழுத்துப் பகுதியின் இறைச்சி, (வி.) எறி, வீசு, மண்ணாங்கட்டியால் எறி.
								
							 
								cloddish
								a. மண்ணாங்கட்டி போன்ற, மண்ணின் தன்மையுடைய.
								
							 
								cloddy
								a. மண்ணாங்கட்டி செறிந்த, மண்ணாலான.
								
							 
								clodhopper
								n. நாட்டுப்புறத்தான், பாங்கறியாதவன், அறிவிலி, வேளாளன்.
								
							 
								clodhopping
								a. முரட்டுத்தனமான, நாகரிகமில்லாத, காட்டுத் தன்மையுள்ள.
								
							 
								clodpate, clodpole, clodpoll
								 பேதை, அறிவிலி.
								
							 
								clog
								n. மரக்கட்டை, காற்கட்டு, முட்டுக்கட்டை, தடை, தடங்கல், சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி, உலோக விளிம்புடைய கட்டை மிதியடி, (வி.) கட்டைகட்டிவிடு, முட்டுக்கட்டையிடு, தடு, தடங்கலிடு, பளுவினால் இயக்கம் தடு, திணித்துவை, திணித்துத் திணறவை, ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு, ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு, ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு, மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
								
							 
								clog-dance
								n. கட்டை மிதியடியின் தாளத்துக்கியைய ஆடும் நடனவகை.
								
							 
								clogged
								a. தடங்கலுக்கு இடமான, தடுப்புக்கு ஆளான.
								
							 
								clogger
								n. புறமிதியடிக்கட்டை செய்பவர்.
								
							 
								cloggy
								n. கட்டிகள் நிரம்பிய,  முடிச்சுக்களுள்ள, ஒட்டிக்கொள்கிற.
								
							 
								cloison
								n. இழைப்பட்டைகளைப் பிரித்துக் காட்டும் இடையீடு.
								
							 
								cloisonnage
								n. பட்டையிட்ட மெருகு வேலை, மெருகுப் பட்டை முறை.
								
							 
								cloisonne enamel
								n. (பிர.) உலோக வரைக்கட்டிடங்களில் இடப்படும் பட்டை மெருகுவேலை.
								
							 
								cloister
								n. துறவுக்கன்னியர் மாடம், துறவுமடம், துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை, சமயவாழ்வுக்கான காப்பிடம், ஒதுக்குப்புறமான இடம், வளைவு, சுற்றி வேயப்பட்ட இடம், துறவு வாழ்க்கை, (வி.) மடத்தில் அடைத்துவை, மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
								
							 
								cloistered
								a. மடத்தில் வாழ்கின்ற.
								
							 
								cloistral
								a. மடத்தைச் சேர்ந்த, மடத்தோடு தொடர்புடைய, ஒதுக்கமான.
								
							 
								clomb, v.  Climb
								 என்பதன் முற்கால இறந்தகால முடிவெச்ச வடிவம்.
								
							 
								clonal
								a. பால்படு பிறப்புடைய ஒரே விதையிலிருந்து பால்படாது பிறந்த செடித்தொகுதி சார்ந்த.