English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
co-opt
v. அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு, ஒத்துத் தேர்ந்தெடு.
co-ordinance
n. கூட்டொழுங்கு முறை, கூட்டுக் கட்டளை.
co-ordinate
n. இனமொத்த பொருள், நேரினப் பொருள், சமவரிசைப்பட்டது, ஒத்த தரமுடையது, (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம், (கண.) ஆயத்தொலை, கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை, (பெ.) இனமொத்த, வகையொத்த, சமவரிசையுடைய, ஒத்த தரமுடைய, நிரைவைப்பமைதி சார்ந்த, நிரற்பாடுடைய, (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய, (வி.) ஓரினப்படுத்து, ஒருதரப்படுத்து, ஒத்திசைவி, இணங்கி ஒரு நிலைப்படுத்து.
co-ordinative
a. நேரினப்படுத்துகிற, ஒத்திசைவாக்கப்பட்ட, இனப்பொருத்தம் காட்டுகின்ற.
co-pilot
n. உடன்வலவர், கூட்டு வானுர்தி ஓட்டி.
co-presence
n. உடனமைவு, உடன்இருப்பு, ஒன்றாக இருத்தல்.
co-regent
n. கூட்டுப் பகர ஆட்சியாளர், அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர்.
co-religionist
n. சமயப்பங்காளி, உடன்சமயத்தோழர், ஒரே சமயத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர்.
co-respondent
n. (சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி, கூட்டு எதிர்வாதி.
co-signatory
n. கூட்டொப்பக்காரர், பலருடன் கையெழுத்திடுபவர், (பெ.) பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற.
co-significative
a. உட்னொத்த உட்குறிப்புடைய.
co-tenant
n. உடன் குடிக்கூலியாளர்.
co-tidal
a. கடலின் வேலி ஏற்ற நேர ஒருமைப்பாடுடைய.
coacervate
a. குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட, (வி.) குவி, கூட்டு, சேர்.
coach
n. தனிவண்டி, மூடுவண்டி, ஆடம்பரவண்டி, வாடகை வண்டி, இருப்பூர்திப் பெட்டி வண்டி, சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி, நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி, கப்பலின் பின்புற அறை, பயிற்சி ஊக்குவிப்பவர், தனிப்பாடங் கற்பிப்பவர், தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர், விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு, (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல், மூடுவண்டியில் ஏறிச்செல், பாடம்கற்பி, பந்தயத்துக்குப் பயிற்சி அளி, தேர்வுக்குப் பயிற்றுவி, ஆசிரியருதவியுடன் படி.
coach-box
n. பெட்டி வண்டியின் வலவன் பீல்ம்.
coach-builder
n. பெட்டி வண்டி செய்பவர்.
coach-fellow
n. துணைக்குதிரை, வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று, பயிற்சித்தோழன், கூட்டாளி.
coach-horn
n. பழங்கால அஞ்சல் வண்டி வலவரின் குழலுத்து.
coach-office
n. பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.