English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cobdenite
n. காப்டன் கோட்பாட்டாளர், தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர்.
coble
n. ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள்.
cobra, cobra de capello
n. நல்ல பாம்பு, நாகப்பாம்பு.
cobric, cobriform
நல்லபாம்பு போன்ற.
coburg
n. ஒருபக்கம் வரிப்பின்னலுடைய பருத்தி அல்லது பட்டுக் கலந்த கம்பிளி மென்துகில் வகை.
cobweb
n. நுலாம்படை, ஒட்டடை, சிலந்தி வலை, நொய்தான கட்டமைப்புள்ள பொருள், நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம், தூசு நிறைந்த குப்பை, மாய வலை, கடுஞ்சிக்கல், (பெ.) மெல்லிய, நொய்தான.
cobwebbery
n. சிலந்திவலைப்பின்னல், சிலந்தி வலைக்களம், நுலாம்படை போன்ற நிலை.
cobwebby
a. சிலந்தி வலை போன்ற.
coca
n. கிளர்ச்சியூட்டும் பொருளாக மென்று தின்னப்படும் இலைகளையுடைய தென்அமெரிக்கச் செடிவகை, செடிவகையின் கிளர்ச்சியூட்டும் இலை.
Coca-Cola
n. கரிய வளியூட்டப்பட்ட மென்குடிநீர் வகை.
cocaine
n. தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து உண்டுபண்ணப் பட்டு உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு வகை.
cocainism
n. மரத்துப்போகச் செய்யும் மருந்து வகையை அளவுக்கு மிஞ்சிப் பயன்படுத்துவதனால் உண்டாகும் கோளாறு.
coccagee
n. இனிப்புப் பழவகை, இனிப்புப் பழத்திலிருந்து உண்டுபண்ணப்படும் மதுவகை.
coccineous
n. ஒண் சிவப்பான.
Coccus
n. (வில.) மூட்டுப்பூச்சித் தொடர்புடைய பூச்சி இனம்.
coccygeal
a. குதலெழும்பு சார்ந்த.
coccyx
n. உள்வால் எலும்பு, குத எலும்பு.
cocercive
a. வல்லந்தப்படுத்தும் இயல்புடைய, கட்டாயப் படுத்துகிற, வன்கண்மையான.
cochin, cochin-china
n. வளர்ப்புக்கோழியினத்தின் வகை, (பெ.) வளர்ப்புக்கோழியினத்தின் வகை சார்ந்த.
cochineal
n. தம்பலப்பூச்சி, இந்திரகோபம், உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை, உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.