English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cochlea
n. சுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை.
cochlear
n. கரண்டி, (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
cochleate, cochleated
a. சுருளாக முறுக்கப்பட்ட, கரண்டி போன்ற.
cock
-1 n. பறவைச் சேவல், சேவற்கோழி, சேவல் கூவும் நேரம், வைகறை, காற்றுநிலை காட்டி, தன்முனைப்புள்ளவர், இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர், விறைப்பான பொருள், குழாய், குழாய்முனை, துப்பாக்கிக் குதிரை, மேல்நோக்கிய வளைவு, மேல்நோக்கிய தொப்பி ஓரம், துலாக்கோல் முள், மூக்கின் மேல்நோக்கிய வளைவு, மாறு கண் நோக்கு, (வி.) நிமிர்த்தி வை, தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை, சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு, ஒருபக்கமாகச் சாய், ஒருச்சாய்த்துப் பார், ஏளனமாகப் பார், அதட்டலாகப் பார், கேள்விக்குறியுடன் நோக்கு, வேண்டுமென்றே கண்சிமிட்டு, பீடு நடைபோடு, வீம்புடன் கைவீசி நட.
cock-a-doodle, cock-a-doodle-doo
n. சேவலின் கூவல், குழந்தை வழக்கில் சேவல், (வி.) கூவு.
cock-a-hoop
a. பெருமித உணர்ச்சியுள்ள, (வினையடை) பெருமிதமாக, வீம்புடன், வீறாப்புடன் கூவிக்கொண்டு.
cock-and-bull
a. பொருந்தாப் புனைவான, நம்ப முடியாத.
cock-eye
n. ஓரப்பார்வைக்கண், வண்டியிழுக்கும் விலங்கினை வண்டிச்சட்டத்துடன் இணைக்கும் கயிற்றுமுனை வளையம்.
cock-eyed
a. ஓரப்பார்வையான, கோணலான, சாய்வாக வைக்கப்பட்ட, சரிமட்டமாயிராத, அறிவற்ற.
cock-fight, cock-fighting
n. கோழிச்சண்டை, சேவல்களுக்கிடையில் நடக்கும் போட்டி, போட்டிச் சண்டை.
cock-horse
n. குழந்தையின் பொம்மைக் குதிரை, குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள், உயரமான வண்டிக்குதிரை, ஊக்கமிக்க விலங்கு, (பெ.) துள்ளுகிற, செருக்குடைய, (வினையடை) குதிரை மீதிவர்ந்து, கால்விரித்துக் கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன்.
cock-loft
n. பரண் கூரைக்கு அடுத்துக் கீழுள்ள அறை.
cock-of-the-rock
n. அழகிய சிறு தென்னமெரிக்கப் பறவை வகை.
cock-shy
n. இலக்கு நோக்கிய எறிவு, வீசுவதற்கு இலக்காக வைக்கப்படும் பொருள், இலக்காக அடிப்பதற்கென்று காட்சிக்காரன் அடுக்கிவைக்கும் தேங்காய் முதலிய பொருள்கள்.
cock-up
n. (அச்சு.) மற்ற எழுத்துக்களைவிட உயர்ந்திருக்கிற முதலெழுத்து, (பெ.) மேல் வளைந்த, (அச்சு.) மற்ற எழுத்துக்களின் உச்சிகளுக்குமேல் உயர்ந்திருக்கிற, உயர்வான.
cockabondy
n. தூண்டிற்புழு வகை.
cockade
n. தொப்பிமீது சின்னமாக அணியப்படும் சூட்டு.
Cockaigne
n. போகமும் களிப்பும் நிறைந்த கற்பனை உலகம், கற்பனைப் பொன்னாடு.
cockalorum
n. தன்முனைப்புள்ள வாலிபன், பச்சைக் குதிரைபோன்ற பிள்ளைகளின் விளையாட்டுவகை.
cockateel, cockatiel
சிறு சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி.