English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cockatoo
n. பெரிய சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி, சிறு குடியானவன்.
cockatrice
n. நச்சுக்கண் பாம்பு, திட்டிவிடம், (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
cockboat
n. கப்பலைச்சேர்ந்த சிறு படகு, உறுதியான கட்டமைப்பில்லாத சிறு படகு.
cocked
a. நிமிர்த்தி வைக்கப்பட்ட, மேல்நோக்கி அல்லது ஒருபக்கம் வளைத்து வைக்கப்பட்ட, குவியல்களாகக் குவிக்கப்பட்ட.
Cocker
n. முற்காலக் கணக்காசிரியர் பெயர்.
cockerel
n. விடைச்சேவல், தன்முனைப்பான இளைஞன்.
cocket
n. (வர.) சுங்கச்சாவடி முத்திரை, சுங்கச் சாவடிச் சான்றுச் சீட்டு.
cockle
-1 n. களைவகை, கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய்.
cockle-bur
n. ஊமத்தை வகை.
cockle-hat
n. புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி.
cockle-shell
n. நத்தையின் தோடு, நொய்தான படகு.
cockled
a. நத்தையைப்போல் தோடுடைய.
cockney
n. லண்டன் நகரத்தான், நகர அனுபவமும் அறிவும் மட்டுமே உள்ளவன், லண்டன் நகரத்துப்பேச்சு வகை, (பெ.) லண்டன் நகரில் பிறந்தவர்க்குரிய இயல்புள்ள.
cockneydom
n. லண்டன் வாணர்களின் உலகம்.
cockneyfy
v. லண்டன் நகரவாசியாக்கு, லண்டன் நகரவாசியைப் போலாக்கு.
cockneyism
n. லண்டன் நகர வாணனின் இயல்புகள்-பழக்கவழக்கங்கள்.
cockpit
n. சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
cockroach
n. கரப்பான் பூச்சி.
cocks-foot
n. மேய்ச்சல் நிலப் புல்வகை.
cockscomb, cocks-comb
n. சேவல் கொண்டை, சேவல் சூட்டு, கோமாளியின் குல்லாய், சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு, ஒளிர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை, பசப்பன், முட்டாள்.