English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cod
-1 n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் பெரிய கடல் மீன்வகை.
cod-bank
n. மீனினம் நாடி அடையும் கடல் கீழ்க்கரை.
cod-piece
n. ஆடவர் குறுங்காற் சட்டையின் முன்புறத் தொங்கற் பை.
coddle
n. கோழை, (வி.) நோயாளியைப்போல் நடத்து, இடங்கொடுத்துக் கெடு, கொஞ்சு, அரைகுறையாக வேகவை.
code
n. சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு.
codeine
n. தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து.
codex
n. (ல.) தொகுப்புநுல், கையெழுத்துச்சுவடி.
codfish
n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் பெரிய கடல் மீன் வகை.
codger
n. (பே-வ.) இழிசினன், சிறுபயல், கிழடு, கிழம்.
codicil
n. விருப்ப ஆவணப் பிற்சேர்க்கை, உயில் அனு பந்தம்.
codify
v. தொகுத்தமை, ஒழுங்காக்கு, முறைப்படுத்து, மனத்திற்கொள்.
codilla
n. சணலின் சொரசொரப்பான பாகம்.
codille
n. சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை.
codist
n. தொகுப்பவர், தொகுப்பு நுல்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
codlin-moth
n. முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
codling
-1 n. உணவாகப் பயன்படும் கடல் மீன்வகையின் குஞ்சு.
codliver oil
n. மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய், மீன் எண்ணெய்.
coefficient
n. (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம்.
coehorn
n. (படை.) குண்டுகளை எறிவதற்கான சிறு பீரங்கி.
coelacanth
n. மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.