English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
colours
n. pl. நிறுவனச்சின்னம், கொடி.
coloury
a. வண்ண மிகுதியுடைய.
colportage
n. திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை.
colporteur
n. சமய நுல்களைத் திரிந்து விற்பவர்.
colt
n. குதிரைக்குட்டி, தடுமாற்றமுடையவன், அனுபவமில்லாத இளைஞன், விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி, ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி, (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார், (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
coltish
a. குதிரைக்குட்டி போன்ற, துள்ளிக் குதிக்கின்ற, குறும்புத்தனமான.
colubrine
a. பாம்பு போன்ற, நஞ்சில்லாப் பாம்பினம் சார்ந்த.
colugo
n. பறப்பதுபோலத் தோன்றும்படி தாவும் வாலில்லாக் குரங்கினத்தின் வகை.
columbarium
n. புறாக்கூடு, இறந்தவர்களின் சாம்பல் கொண்ட தாழிகள் வைப்பதற்குரிய புறாக்கூடு போன்ற அமைப்புடைய மாடம், உத்தரங்களின் நுனி பொருத்துவதற்காகச் சுவரில் உள்ள பள்ளம்.
Columbian
a. அமெரிக்காவைச் சார்ந்த, பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை.
columbine
n. புறாக்கூட்டமைவுடைய மலர்களைக்கொண்ட செடிவகை, (பெ.) புறாவினுக்குரிய, புறாப்போன்ற, புறாநிறங் கொண்ட.
columbit
n. கனிப்பொருள் வகை.
columbium
n. (வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள்.
columel
n. சிறுதூண், சிறு பத்தி.
columella
n. திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு, முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு, பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு, சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
column
n. தூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
columnated, columned, columniated
தூண்களுள்ள, பத்திகளுள்ள.
columniation
n. தூண்கள் அமைத்தல், தூண்களின் ஒழுங்கமைப்பு.
columnist
n. பத்திரிக்கையில் குறிப்பிட்ட பத்தியில் தொடர்ந்து எழுதுபவர்.