English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
columnnal, columnar
தூணினைச் சார்ந்த, தூண் போன்ற, பத்தியாய் அமைந்த.
colure
n. ஒன்றையொன்று செங்கோணமாக வான துருவங்களில் வெட்டிக் குறுக்கிடும் இரு நிரைவட்டங்களில் ஒன்று.
coma
-1 n. இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை, எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை, செயலின்மை.
comal, comate
(தாவ.) மரஉச்சியின் தழைக்கொத்துச் சார்ந்த, (வான்.) வால் வெள்ளியின் தலைப்புச் சார்ந்த.
comatose
a. உணர்விழப்பால் தாக்கப்பட்ட, அரைகுறைத் தூக்கமான, மயக்கமான.
comb
-1 n. சீப்பு, சீப்பு போன்ற கருவி, இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி, பறவைகளின் கொண்டை, அலைஉச்சி, கூரை அல்லது மலையுச்சி, தேன் கூடு, தேனடை, (வி.) சீப்பினால் ஒழுங்குசெய், துப்புரவாக்கு, சீவு, வாரு, குதிரையைத் தேய், முழுவதும் தேடிப்பார், கடுமையாக அலசிப்பார், தேடி ஒழி, அலசித்திரட்டு, சுருண்டு திரள், வெண்ணுரையோடு சிதறு.
comb-out
n. தேடிப்பார்த்துத் தேவையற்றதை நீக்கும் முறை, இராணுவப் பணிக்குத் தகுதியுடையவர்களைத் தேடிப் பிடிக்கும் முறை.
combat
n. சண்டை, போர், (வி.) எதிர், போரிடு, எதிர்த்துப்போராடு, மல்லாடு, போட்டியிடு, எதிர்த்துநில், வாதிடு, சொற்போர் செய், உழன்று முயற்சிசெய்.
combatable
a. போரிடும் இயல்புள்ள.
combatant
n. பொருநர், போரிடுபவர், சண்டையில் ஈடுவடுபவர், (பெ.) போரிடுகிற, சண்டையில் ஈடுபடுகிற, போர்நாட்டமுள்ள.
combative
a. எதிர்ப்புச் செய்கிற, சண்டைக்குணமுள்ள, போர் மனப்பான்மையுடைய.
comber
-1 n. கம்பளி சிக்கெடுப்பவர், தூய்மையாக்குபவர், வார் கருவி, சுருள்பேரலை, நுரையுடைய நீண்ட அலை.
combination
n. இணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம்.
combination-room
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களின் பொது அறை.
combinations
n. pl. கையில்லாத சட்டையும் குறுங்கால் சட்டையும் இணைந்த முழு உள்ளாடைத்தொகுதி, (கண.) சேர் வகைகள், குறிப்பிட்ட உருக்கள் குறிப்பிட்ட தொகையடுக்காக இணையும் வகைப்படிவங்கள்.
combine
-1 n. வணிகச்சங்களின் கூட்டு நிறுவனம், பொறுப்பாட்சிக் குழு, அறுவடைக் கருவியோடு போரடிக்கும் கருவியும் இணைந்த கூட்டுப்பொறி.
combings
n. pl. சீவப்பட்ட மயிர்க்கூளம், வாரப்பட்ட இழைக்கூளம்.
comburgess
n. தன்னாட்சி பெற்ற நகரத்தின் உடன் உரிமைக் குடிமப்ன்.
combust
n. சுட்டெரிக்கப்பட்ட பொருள், (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட, கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
combustibility
n. எரியும் தன்மை.