English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
concede
v. எதிர்ப்பின்றி விட்டுக்கொடு, சலுகையளி, அட்டியில்லாமல் ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்.
conceit
n. இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
conceited
a. போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய.
conceity
a. இறுமாப்பு வாய்ந்த.
conceivable
a. கருதத்தக்க, எண்ணிப்பார்க்கக் கூடிய, மனத்தால் பாவிக்கவல்ல.
conceive
v. கருக்கொள், சூலுறு, கருது, கருத்தில் உரவாக்கு, பாவனை செய், எண்ணிப்பார், உணர், புரிந்து கொள், கருத்துப்பற்றிக்கொள், சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு.
concelebrate
v. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
concenancy
n. தொடர்பு, பொருத்தம்.
concent
n. பல்குரல் இசைவு.
concentionary
n. ஒப்பந்தப்படியான நடைமுறை, ஒப்பந்த உரிமைக் குடியாண்மையாளர், (பெ.) ஒப்பந்தத்தின்படி செயலாற்றுகின்ற.
concentrate
-1 n. மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன், (வி.) பொதுமைய நோக்கி இயக்கு, பொதுமையம் நோக்கிச் செல், கருத்தை ஒருமுகப்படுத்து, எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து, முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து, ஒருமுகப்படு, ஒருமுக நோக்கு, கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு, குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
concentration
n. ஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
concentrative
a. ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த.
concentrator
n. கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி, சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
concentre
v. பொதுமையத்தில் கூடு, பொதுமைய நோக்கிச் செல், ஒரே மையம் கொண்டிரு, பொது மையத்தை நோக்கி இயக்கு.
concentric, concentrical
a. ஒரே மையமுள்ள, பொது மையம் கொண்டுள்ள.
concept
n. கருத்துப்படிவம், பொதுக்கருத்து, ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து, கருதப்பட்ட ஒன்று.
conceptacle
n. வைக்குமிடம், கொள்ளுமிடம், சுருக்குழி.
conception
n. கருக்கொள்ளுதல், மலர்த்துகள் பொலிவுறுதல், கருதுதல், கருத்துருவாக்கல், எண்ணம், கருத்து, கருத்தாற்றல், கற்பனையாற்றல், திட்டப்புனைவாற்றல், கருத்துருவம், திட்டம்.
conceptive
a. எண்ணங்களுக்குரிய, கருத்தரித்தல், தொடர்பான.