English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cook
-1 n. சமையல் செய்பவர், மடைத்தொழிலாளர், சமையற்காரர், சமையற்காரி, சூடுபடுத்து முறை வகை, சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை, (வி.) உணவு சமை, சமையல் செய், சமையற்கலை பயில், பக்குவமாகு, சமையல் செய்யப்பெறு, பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை, சூழ்ச்சியுடன் இயற்று, புனைந்து போலியாக உருவாக்கு, சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு, ஏற்பாடாகு, நடைபெறு.
cook-house
n. மடைப்பள்ளி, சமையல் அறை.
cook-room
n. சமையல் அறை, அடிசிற்களம்.
cooker
n. பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம், சமையல் துணைக்கருவித் தொகுதி, சமையலுக்குரிய தனிவகைப் பொருள், சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி, பொய்க்கணக்கு உருவாக்குபவர், வலிந்து உருவாக்குபவர்.
cookery-general
n. சமையல் வேலையும் பொது வேலையும் செய்யும் பணியாள்.
cookie
n. தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை.
cooking-apples
n. சமையல் செய்வதற்கேற்ற ஆப்பிள் பழவகை.
cooking-range
n. பலவகை உணவுகளை ஒரே சமயத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சூட்டடுப்பு.
cookmaid
n. சமையற் பணிப்பெண், சமையற்காரரின் உதவிப் பணிப்பெண்.
cool
n. குளிர் நலம், சில்லென்ற தன்மை, குளிர் நலமுடையது, குளிர், வானிலை, குளிர்ந்த காற்று, குளிர்ச்சிதரும் இடம், (பெ.) இளங்குளிரான, மட்டான குளிர்ச்சி வாய்ந்த, பரபரப்பற்ற, அடங்கிய, அமைதியான, கிளர்ச்சியற்ற, ஆர்வமற்ற, அசட்டையான, மதிப்புக்கேடான, ஆணவமான, (வி.) குளிர்ச்சியாக்கு, சூடு தணி, சூடு ஆற்று, குளிர்ச்சியாகு, சூடு ஆறு, மட்டுப்படுத்து, அமைதியூட்டு, மிதமாகு, அமைதியுறு, கிளர்ச்சி குன்றவை, ஆர்வமிழ.
Cool drinks
குளிர்பானங்கள், தண்ணருந்தகம்
cool-headed
a. எளிதில் உணர்ச்சி வசப்படாத, அமைதியோடு செயலாற்றக்கூடிய, ஆர்ந்தமர்ந்த.
cool-house
n. செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை.
cool-tankard
n. குளிர் இன்தேறல் கலவை வகை, நீல மலர்ச் செடிவகை.
coolant
n. வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர்.
cooler
n. குளிர்ச்சியாக்கும் பொருள், குளிர் கலம், பொருள்களைக் குளிரவைப்பதற்குரிய கலம்.
coolie
n. (த.) கூலியாள், இந்திய அல்லது சீன ஒப்பந்த வேலையாள்.
coolish
a. ஓரளவு குளிர்ந்த.
coolness
n. குளிர்பதம், மிதக் குளிர்ச்சி, புறக்கணிப்பு, கவனக்குறைவு, நட்புத்தளர்ச்சி, ஆர்வமற்ற தன்மை.