English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
coomb
n. முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு).
coon
n. அமெரிக்கக் கரடி இனவகை, தந்திரக்காரன், நீகிரோ இனத்தவர்.
coon-can
n. சீட்டுக்களை வரிசைப்படுத்தி இருவராடும் சீட்டாட்ட வகை.
coon-song
n. நீகிரோ இனத்தவரின் பாட்டு.
coop
n. பிரம்புக்கூடை, கோழிக்கூண்டு, மீன் கூடை, சிறு விலங்குகளை அடைக்கும் பட்டி, சிறை (வி.) கூண்டில் அடை, சிறைப்படுத்து.
cooper
n. கூடைமுனைபவர், மிடா வளைப்பவர், பெட்டி-தொட்டி செய்பவர், கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர், மதுவைச் சில்லறையாக விற்பவர், இன்தேறல் கலவை வகை, (வி.) கூடை திருத்து, மிடாப் பழுது பார், மிடாவில் அடை, சரி செய்து வை, ஒட்டுப்போடு.
cooperage
n. மிடா முதலியன செய்பவரின் பணி, மிடா முதலியன செய்பவரின் பணிமனை, மிடாச் செய்பவருக்குரிய கூலி.
coot
n. உச்சியில் வெண்சுட்டியும் குறுவாலுமுள்ள வாத்தின் நீர்ப்பறவை வகை.
cop
n. உச்சி, தலைப்பு, நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
copaiba
n. தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
copal
n. வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
coparcenary
n. கூட்டுமையின் மரபுரிமையில் இணையுரிமையாளர், (பெ.) கூட்டுடைமையின் மரபுரிமையில் இணையுரிமை பெற்ற.
coparcener
n. கூட்டுடைமையுரிமையின் இன மரபுரிமையாளர்.
copartner
n. உடன்பங்காளி, உடனொத்த தோழர், உடனொத்துப் பங்கு கொள்பவர்.
copartnery
n. கூட்டுப்பங்கு நிலை.
cope
-1 n. மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தளமிணை.
cope-stone
n. மதிலின் முகட்டுக்கல்.
copeck
n. ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி, ருசியச் செப்புக் காசு.
coper
n. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு.
Copernican
a. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.