English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
corbel
n. (க-க.) தண்டையக்கட்டு, பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை.
corbel-block
n. (க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு.
corbel-table
n. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம்.
corbie
n. பிணந்தின்னி காக்கை, அண்டங்காக்கை, காகம்.
corbie-steps
n. முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள்.
cord
n. நுல்கயிறு, மணிக்கயிறு, கட்டுதளை, கட்டிழை, (உள்.) திண்ணிய நாளம், 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை, மணியிழை, துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை, சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு, (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு, வரிந்து கட்டு.
cord ovan
n. ஸ்பெயின் நாட்டிலுள்ள கார்டோவாவிலிருந்து முன்னாள் வந்த ஆட்டுத்தோல் வகை, (பெ.) கார்டோவாவைச் சார்ந்த.
cord-grass
n. கயிறு செய்யப்பயன்படும் சேற்றுநிலப் புல் வகை.
cordage
n. கப்பல் கட்டுளைத்தொகுதி.
cordate
a. நெஞ்சுக்குலை வடிவான, இதய உருவான, (தாவ.) இலையின் காம்படியில் உள்வளைவான விளிம்புடைய.
corded
கயிறுகளால் கட்டப்பட்ட, கயிறுகள் அடுக்கிய, கிளைநரம்புகள் ஓடிய, பக்கவாட்டில் வரிவரியாயமைந்த, (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Cordelier
n. கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரான்சிஸ்கன் மடத்தின் பிரிவைச் சேர்ந்த கிறித்தவத் துறவி.
cordeliers
n. pl. கடுந்துறவி மடத்தில் கூடிய பிரஞ்சு புரட்சியாளர்களின் குழாம்.
cordial
n. இதயக்கிளர்ச்சி தரும்மருந்து, கிளர்ச்சியூட்டும் குடிவகை, ஊக்கம் தரும்உணவு வகை, மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை, (பெ.) மனமார்ந்த, உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய, ஆர்வமிக்க, கபடற்ற, அன்பு நிறைந்த, உளங்கனிந்த, கிளர்ச்சி யூட்டுகிற.
cordialise
v. மகிழ்ச்சிக்கொள், இணக்கமாயிரு, தோழமை உணர்ச்சிக்கொள், மகிழ்வுடன் உறவாடு.
cordillera
n. (ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை.
cording
n. வரிந்துகட்டுதல், கப்பல் பாய்மரக் கயிற்றுத் தொகுதி.
cordite
n. கயிறுவடிவான புகையற்ற வெடிப்பொருள்.
cordoba
n. நிகராகுவோ நாட்டின் மூல அளவை நாணயம்.
cordon
n. கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை, இராணுவ அரண்தளவரிசை, காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி, உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி, தடைவேலி ஆள் அணிவரிசை, கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை, அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.