English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
corduroy
n. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகை, (பெ.) சொரசொரப்பான துணி வகையாலான.
corduroys
n. pl. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
cordwainner
n. புதைமிதி செய்பவர்.
cordwood
n. 12க்ஷ் கனஅடி அளவாகத் துண்டிக்கப்பட்டு அடுக்கிய வெட்டுமரத் தொகுதி.
core
-1 n. கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று.
cored
a. நடுப்பகுதி நீக்கப்பட்ட, நடுப்பகுதியை உடைய, வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட.
coreless
a. நடுப்பகுதி இல்லாத, உள்ளீடில்லாத, பொள்ளலான.
coreopsis
n. வட்டவடிவான மஞ்சள் மலருடைய செடி வகை.
corer
n. உள்ளீடு அகற்றும் கருவி.
corf
n. நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை, கூண்டு இல்லாத பார வண்டி, மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு, உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை.
corgi, corgy
வேல்ஸ் நாட்டுச் சிறுநாய்.
coriaceous
a. தோல் போன்ற.
coriander
n. கொத்துமலர்ச் செடி.
corillion, cotillon
நாட்டு நடன வகை, நடனப்பண்.
Corinthian
n. கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர், காலவண்ணப் புதுமையில் மிதப்பவர், புதுமைப் பாங்காளர், விருப்பார்வ கேளிக்கையாளர், இன்பவாணர், ஒழுக்கங்கெட்டவர், (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த, மணிவடிவத் தூண் தலைப்புடைய, கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த, பகட்டழகான இலக்கிய நடையுடைய, ஒழுக்கவரம்பு கெட்ட.
corinthianise
v. ஒழுக்க வரம்பற்று நட.
cork
n. தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு.
cork-borer
n. தக்கைகளில் துளையிடும் கருவி.
cork-cambium
n. பட்டையாக்குபடை, மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
cork-carpet
n. தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.