English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
corn-plaster
n. காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து.
corn-popper
n. கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம்.
corn-rent
n. பணமாக அல்லாமல் தானியமாகச் செலுத்தப்படும் வாரம்.
corn-salad
n. சிறு சதைப்பற்றுடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
corn-snow
n. நுண்மணி உறைபனி.
corn-spirit
n. கூலப்பயிர்ச் சிறு தெய்வம்.
corn-thrips
n. கூலச்சத்தினை உறிஞ்சும் மிக நுண்ணிய பூச்சி வகை.
corn-weevil
n. தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை.
cornage
n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி, கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
cornbrake
n. மக்காச்சோளப் பண்ணை.
cornbrash
n. (மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
corncockle
n. கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை
corncrake
n. வயல்களில் வாழும் சிற்றலகுடைய ஐரோப்பியப் பறவை வகை.
cornea
n. விழி முன்தோல், விழிவெண்படலம்.
cornel
n. தென் ஐரோப்பாவைச் சேர்ந்த சிறு மரவகை.
cornelian
n. மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை.
corneous
a. கொம்பு போன்ற செறிவுள்ள, கொம்பையொத்த, கடினமான, காய்ப்புள்ள.
corner
n. மூலை, இடுக்கு, கோணம், குவிவரைச் சந்திப்பு, தளச்சந்திப்பு இடுக்கு, முனங்கு, முனைப்பான கூம்பு, ஒடுங்கிய உள்வளைவிடம், மறைவிடம், தனியிடம், வளைவு, அடைப்பு, தொலைவிடம், இக்கட்டு நிலை, திக்குமுக்காடச் செய்யும் நிலை, சாய்பந்தெறிவு, வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை, குத்தகைக் கூட்டு, (வி.) மூலை முக்கு அமை, மூலையில் வை, இக்கட்டுக்கு உட்படுத்து, வலிந்து பணியவை, சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய், பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர், குத்தகைக் கூட்டு அமை.
corner-boy
n. தெருவீணன், சந்திக்குறும்பன்.
corner-man
n. நீகிரோ பாடகர் வரிசையில் கடைக்கோடியிலுள்ள பாண்மகன்.