English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cornigerous
a. கொம்புடைய.
corning-house
n. துப்பாக்கி மருந்து நுண்மணிகளாக வார்க்கப்படும் இடம்.
cornist
n. துளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
cornland
n. கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம்.
cornloft
n. கூலக் களஞ்சியம், பத்தாயம்.
corno
n. பிரஞ்சு துளை இசைக்கருவி வகை.
corno di bassetto
n. (இத்.) மிக்க நயமும் மெல்லோசையும் உடைய துளை இசைக்கருவி வகை, இசைக்கருவித் துளையின் அழுத்துகட்டை.
cornpipe
n. கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை.
cornstalk
n. கூலச்செடியின் காம்பு, நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர், நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்.
cornstarch
n. களிவகைகள் செய்வதற்கான மக்காச் சோள மாவு.
cornstone
n. கூலப்பயிருக்கு ஊட்டந்தரும் கன்மச் சத்து அடங்கியுள்ள சுண்ணக்கல்.
cornu
n. கொம்பு, கொம்பு போன்ற உறுப்பு, எலும்பு முனை.
cornucopia
n. வளமார் கொம்பு, வளங்காட்டும் சின்னம், மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு, வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம், பொங்கு மாவளம்.
cornute, cornuted
கொம்புடைய, கொம்பு போன்ற, கொம்பினையொத்த பிதுக்கங்களுள்ள.
cornwhisky
n. மக்காச் சோளத்திலிருந்து செய்யப்படும் அமெரிக்கத் தேறல் வகை.
cornworm
n. தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை, அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு.
corny
-1 a. கூலம் போன்ற, கூலத்தினின்றும் உண்டாக்கப்பட்ட, கூலத்திற்குரிய, கூலம் மலிந்த.
corolla
n. (தாவ.) பூவிதழ் வட்டம், அல்லி வட்டம்.
corollary
n. பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌியப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌியப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன்.
corona
-1 n. மகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம், பரிவட்டம், வில் ஒளிவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம், நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம், தொங்கல் சரவிளக்கு வட்டம், (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு, (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு, (தாவ.) அகவிதழ்க்கேசம், மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம், (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.