English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cow-leech
n. மாட்டு மருத்துவர்.
cow-parsnip
n. பசுத்தீவனச் செடிவகை.
cow-pea
n. மொச்சை இனச் செடிவகை.
cow-pilot
n. மேற்கு இந்தியத் தீவுகளின் மீன் வகை.
cow-plant
n. இலங்கையிலுள்ள பால் போன்ற சாறுள்ள செடி வகை.
cow-pox
n. கோவாசூரி, பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை.
cow-puncher
n. பசுமேய்க்கும் சிறுவன், மாட்டிடையன்.
cow-tree
n. பால்மரம், பால்போன்ற சாறுள்ள தென் அமெரிக்க முசுக்கட்டையின் மரம்.
cow-wheat
n. கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை.
coward
n. கோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு.
cowardice
n. கோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம்.
cowardly
a. கோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக.
cowboy
n. பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன், பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.
cowdie-gum
n. எண்ணெய்ச் சாயம் செய்யப் பயன்படும் பிசின் வகை.
cowdie-pine
n. பிசின் வகை தரும் குவிகாய் உடைய மர வகை.
cowed
a. அச்சுறுத்தி அடக்கப்பட்ட, முனைப்பழிந்த, முற்றிலும் ஆர்வமிழந்த.
cower
v. அச்சத்தால் அடங்கு, கூனிக்குறுகு, பதுங்கு, குவிவுறு, குந்தியுரு.
cowfeeder
n. பால்பண்ணைக்காரன்.
cowfish
n. பசுவினது போன்ற முகமுடைய மீன்வகை, 'கடற்பசு', 'பிரசீல்' நாட்டு ஆறுகளிலுள்ள மீன் வகை, பல்லுள்ள சிறு திமிங்கில மீன்வகை, கொம்புபோன்ற புருவ முள்ளுடைய மீன்வகை.
cowhage
n. வெப்பமண்டல அவரைவகைக்கொடி, புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர், அவரை வகைக் கொடியின் விதைகள்.