English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cowhide
n. பசுவின் தோல், பதனிடப்பட்ட பசுத்தோல், பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை, (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி.
cowhouse
n. பசுத்தொழுவம்.
cowish
a. பசுமாடு போன்ற, கோழையான.
cowl
-1 n. தொப்பி, தலைமூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி, மடத்துத் துறவிக்குரிய சின்னம், மடத்துறவிநிலை, மடத்துறவி, புகைபோக்கி மூடி, இயந்திர மூடாக்கு, விமான இயந்திரக்கவிகை மூடி, (வி.) மூடாக்காக மூடு, மடத்துத் துறவியாக்கு.
cowlick
n. நெற்றிச் சுழிமயிர்க்குஞ்சம்.
cowling
n. வானுர்தி இயந்திரத்தின் மேல்மூடி.
cowrie, cowry
சோழி, பண்டமாற்று நாணயமாக வழங்கும் சிப்பி, சிப்பி மீன் வகை.
cowshed
n. பசுத்தொழுவம், மாட்டுக்கொட்டில்.
cowslip
n. மணமுள்ள மஞ்சள் மலர்உடைய காட்டுச் செடிவகை.
cowslipd
a. காட்டுச் செடிவகையின் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட.
coxa
n. இடுப்பு, வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு.
coxalgia
n. இடுப்புவலி, இடுப்பு நோய்.
coxcomb
n. கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு, கோமாளி, முட்டாள், பகடி, பசப்பன்.
coxcombic, coxcombical
a. பகட்டான, தற்பெருமையுடைய, தருக்குடைய.
coxcombry
n. கோமாளித்தனம், பகட்டுத்தனம்.
coxswain
n. படகோட்டி, படகையும் படகின் ஆட்களையும் பொறுப்பாகக் கொண்டுள்ள சிறு அதிகாரி, (வி.) படகோட்டியாகச் செயலாற்று.
coxy
a. இறுமாப்புடைய, தன் முனைப்புமிக்க.
coy
a. நாணமுடைய, கூச்சமுள்ள, இடவகையில் ஒதுக்கமான, பேச்சு வகையில் ஒதுங்குகிற, தன்னடக்கமான.
coyote
n. சிறு வடஅமெரிக்க ஓநாய் வகை.