English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
creature
n. படைப்புயிர், உயிரினம், கைப்பாவை, கைப்படைப்பு, சார்பாளர், விரும்புபவரைக் குறிப்பிடும் சொல், வெறுப்பவரைக் குறிப்பிடும் சொல்.
creche
n. குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம், குழந்தை வளர்ப்புப் பண்ணை.
credence
n. நம்புதல், நம்பிக்கை, நம்புதல் பெறும் நிலை, திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை, திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
credendum
n. நம்பவேண்டிய பொருள், சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி.
credent
a. நம்பத்தகுந்த, எதையும் நம்புகிற, எளிதில் நம்பும் இயல்புடைய.
credential
n. நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று, (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற.
credentials
n. pl. அறிமுகச் சான்றுக் கடிதங்கள்.
credible
a. நம்பிக்கைக்குரிய, நம்பத்தக்க.
credit
n. நம்பிக்கை, தகுதிக்குரிய மதிப்பு, பாராட்டு, நன்மதிப்பு, நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு, நற்பெயர், புகழ், மேன்மை, சிறப்பளிப்பவர், சிறப்பளிப்பது, மேம்பாடு, தனிச்சிறப்பு, நன்னடத்தை, கடன் பொறுப்பில் விற்பனை, கடன் மதிப்பு, கடன் தவணைச்சலுகை, பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை, கணக்கேட்டின் வரவினப்பகுதி, சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை, பொறுப்பீட்டுத்தொகை, சலுகைக் கடன் மதிப்பெல்லை, அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு, (வி.) நம்பு, நம்பிக்கை கொள், சலுகையளி, கடன் தவணை கொடு, பணம் செலுத்தத் தவணை வழங்கு, கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய், மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை, மதித்து ஏற்றுக்கொள், நம்பி ஒப்புக்கொள்.
creditable
a. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
creditor
n. கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு.
credo
n. சமயப்பற்றுக்குரிய கோட்பாடு, திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு.
credulity
n. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
credulous
a. எளிதாக நம்புகிற, தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய, ஐயப்படாத.
creed
n. திருமுறைக் கோட்பாடு, முறைப்பட்ட சமயக் கோட்பாடு, கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு.
creek
n. கழி, கடற்கூம்பு, வேலிக்கழிமுகம், ஆற்றுக்கால், வங்கம், சிறு துறைமுகம், ஆற்றுப் புகுமுகம், ஆற்று வளைவு, மலைகளுக்கிடையிலுள்ள சமவெளி.
creeky
a. கழிகள் நிறைந்த, வளைந்து செல்கிற.
creel
n. மீன் பிடிப்போரின் பெரிய பிரப்பங்கூடை.
creep
n. நகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவெளி, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
creep-hole
n. ஒளிந்து கொள்வதற்கான வளை, மறைவழி வகை, வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.