English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
crenellated
a. அரண்மதில் வகையில் இடைவெளிகளிட்ட, புழை வாய்கள் அமைக்கப்பட்ட.
crenulate, crenulated
a. வெட்டுவாய்களுள்ள, அரம் போன்ற நுண் பல் விளிம்புடைய.
creole
n. மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர், அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர், (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான, விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட.
creosote
n. கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி, வாணிகத்துறைக் கரியகக் காடி, (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
creosote-plant
n. கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை.
crepe
n. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய துணி, (வி.) மயிர் போலச் சுருள்வி.
crepe-soled
a. புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள.
crepitate
v. படபடவென வெடி, வெடிப்போசை எழுப்பு, கடகடவென ஒலி, ஒடி, முறி, வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை.
crepitation
n. படபடத்தல், நெறுநெறுத்தல், வெடிப்போசை, எழுப்புதல்,( மரு.) குறுகுறு ஒலி, உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
crepoline
n. சுருக்கங்களுள்ள இலேசான மெல்லிய பட்டுத் துணி போன்ற ஆடைப்பொருள்.
crepon
n. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய உறுதிமிக்க துணி வகை.
crept, v. creep
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
crepuscle
n. மாலை அரை இருள், அந்தி அரை ஒளி.
crepuscular, crepusculous
a. அந்தி அரை ஒளி சார்ந்த, மங்கலான, விட்டுவிட்டு ஒளிர்கிற, முழுவிளக்கமற்ற, முழு அறிவொளி பெறாத, (வில.) அந்திமாலையில் தோன்றுகிற, அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய.
crescendo
n. (இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம், படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல், உச்ச நிலையை நோக்கிய போக்கு, (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற, (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு, (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
crescent
n. வளர்மதி, வளர்பிறை வடிவம், வளர்பிறை வடிவுடையது, துருக்கிய சுல்தானின் கொடி, துருக்கிய அரசர் சின்னம், துருக்கிய அரசு, இஸ்லாமிய சமயம், பிறைவடிவக் கட்டிட வரிசை, பிறைவடிவ அப்பம், (பெ.) வளர்கிற, பெருகுகிற, பிறைவடிவமுள்ள.
crescentade
n. இஸ்லாமியரது சமயநெறிப்போர்.
crescented, crescentic
a. பிறைபோல் அமைந்த, பிறை வடிவான.
cress
n. உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை.
cresset
n. இருப்புச்சட்டி, தீப்பந்தம், காட விளக்கு, சொக்கப்பானை உச்சி எரி கூடை, விளக்குக் கம்பத்துக்குரிய எண்ணெய்ச்சட்டி, துறைமுகத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஒளிப்பந்தக் கூடை.